ஒரே ஒரு சின்ன தப்பு.. குவிந்த ‘4000’ போன் கால்.. உண்மை தெரிஞ்சு மிரண்டு போன இளம்பெண்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இளம்பெண் ஒருவருக்கும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிஸ்டு கால்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து நாட்டின் வடக்கு அயர்லாந்தின் பாங்கூரை சேர்ந்தவர் ஹெலன். இவர் அங்கு முதலுதவி பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் அவரது செல்போனுக்கு திடீரென நிறைய அழைப்புகள் வந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் அவர் குழம்பிப் போயுள்ளார்.
ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அழைப்புகள் அவருக்கு தொடர்ந்து வந்துகொண்டே இருந்துள்ளது. இதன் பின்னர்தான் இதற்கான காரணத்தை அவர் கண்டுபிடித்துள்ளார்.
அது என்னவென்றால் ஸ்பெண்ட் லோக்கல் என்ற உதவிமைய நிறுவனத்தின் தொலைபேசி எண்ணும் ஹெலனின் தொலைபேசி இன்னும் ஒரே ஒரு நம்பர் தான் வித்தியாசம் உள்ளது.
இதனை அந்த நிறுவனம் சரியாக கவனிக்காமல் தவறுதலாக ஹெலனின் நம்பரை விளம்பரத்திற்கு கொடுத்துள்ளது. இதனைப் பார்த்த பலரும் அந்த நம்பரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதனை கண்டறிந்த ஹெலன், உடனே சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அந்த நிறுவனம் ஹெலனிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.
மற்ற செய்திகள்