குழந்தைக்கு பெயர் தேடிய போது.. கணவர் பற்றி தெரிய வந்த அதிர்ச்சி கலந்த உண்மை!!.. "இது தெரியாம கல்யாணமும் நடந்துடுச்சே"

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சமூக வலைத்தளத்தில் பிரபலமான பெண் ஒருவர் தனது கணவர் குறித்து தெரிய வந்த விஷயம் பற்றி தற்போது பகிர்ந்துள்ள பதிவு, அதிக கவனம் பெற்று வருகிறது.

குழந்தைக்கு பெயர் தேடிய போது.. கணவர் பற்றி தெரிய வந்த அதிர்ச்சி கலந்த உண்மை!!.. "இது தெரியாம கல்யாணமும் நடந்துடுச்சே"

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | "1 மணிநேரம் முன்பு போன் பண்ணான்.. நான் எடுக்கல".. இளம் உதவி இயக்குனர் திடீர் மரணம்.. வேதனையில் ஷாந்தனு!!

அமெரிக்காவின் உட்டா என்னும் மாகாணத்தைச் சேர்ந்தவர் மார்செல்லா ஹில். இவருக்கு தற்போது 42 வயதாகும் நிலையில், ஏற்கனவே திருமணமாகி கணவருடன் வாழ்ந்தும் வருகிறார்.

இதனிடையே, மார்செல்லா கர்ப்பமாக இருந்த சூழலில் அவரது கணவர் குறித்து தெரிய வந்த விஷயத்தை தற்போது மார்செல்லா பகிர்ந்துள்ளார்.

தங்களின் குழந்தைக்காக கணவன் மற்றும் மனைவி மார்செல்லா ஆகிய இருவரும் சேர்ந்து பெயர்களை தேடிக் கொண்டிருந்துள்ளனர். இதற்காக தங்கள் இருவரின் தாத்தா, பாட்டி மற்றும் கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டியின் பெயர்களை பார்த்து அதனை வைக்கலாமா என்றும் யோசித்து கொண்டு இருந்ததாக தெரிகிறது.

Woman found about her husband while she is pregnant

Images are subject to © copyright to their respective owners.

அப்போது தான் கடும் அதிர்ச்சி ஒன்று மார்செல்லா மற்றும் அவரது கணவருக்கு காத்திருந்துள்ளது. அதாவது இருவரின் உறவினரில் உள்ள தாத்தா, பாட்டிகளின் பெயர்கள் ஒரே பெயர்களாக இருந்துள்ளது இருவருக்கும் சற்று குழப்பத்தையும் அதே வேளையில் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளது. உடனடியாக தங்களது தாத்தா, பாட்டிகளிடம் மார்செல்லா ஹில் மற்றும் அவரது கணவர் ஆகியோர் கேட்ட போது தான், ஹில்லின் மூன்றாவது உறவினர் குடும்பத்தில் Cousin தான் அவரது கணவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து, மூன்றாவது உறவினருடன் குழந்தை பெற்றுக் கொள்வதில் அபாயங்கள் எதுவும் இருக்கிறதா என்பதையும் ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்படி பார்த்த போது அதில் எதுவும் பிரச்சனை இருக்காது என்பது தெரிய வந்துள்ள நிலையில், தனக்கு Cousin முறை வரும் நபரை தான் மார்செல்லா திருமணம் செய்ததும் உறுதியாகி உள்ளது.

Woman found about her husband while she is pregnant

Images are subject to © copyright to their respective owners.

அவர்களின் திருமணம் உள்ளூர் நீதிமன்றத்தில் நடைபெற்றதாகவும் அவர்களின் தாத்தா, பாட்டி ஆகியோர் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும் மார்செல்லா குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த வினோதமான செய்தியை காலப்போக்கில் அவர்கள் ஏற்றுக் கொண்ட நிலையில் உறவு முறையில் நன்மைகள் இருப்பதாகவும் கேலி செய்தும் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | "அட இது தெரியாம இருந்துட்டேனே".. ஒரே லாட்டரியில் 385 கோடி ரூபாய்.. பெண்ணின் வாழ்க்கையில் நடந்த ட்விஸ்ட்!!

WOMAN, HUSBAND, PREGNANT

மற்ற செய்திகள்