'நீ வேலைக்கு வர வேண்டாம்'... 'MD' அனுப்பிய மெசேஜ்'... 'பொய் சொல்லிவிட்டு Foot Ball மேட்ச் பாக்க போன இளம்பெண்'... சிக்கிய சுவாரசிய பின்னணி!
முகப்பு > செய்திகள் > உலகம்பொய் சொல்லிவிட்டு வேலைக்கு வராமல் கால்பந்து விளையாட்டு பார்க்கப் போன இளம்பெண் சிக்கியதன் சுவாரசிய பின்னணி தற்போது வெளியாகியுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லுமுல்லு திரைப்படத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்த படத்தில் ரஜினி தனது முதலாளியிடம் பொய் சொல்லிவிட்டு கால்பந்து போட்டியைக் காணச் சென்று தனது முதலாளியிடம் மாட்டிக் கொள்வார். தற்போது நிஜ வாழ்க்கையிலேயே அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.
இங்கிலாந்தில் உள்ள Ilkley என்ற இடத்தைச் சேர்ந்தவர் Nina Farooqi. இவரது தோழி, இங்கிலாந்து பங்கேற்கும் கால்பந்து போட்டிக்கு டிக்கெட்கள் கிடைத்திருப்பதாகக் கூறியுள்ளார். இதனால் செம குஷியான Nina, தனது அலுவலகத்தில் விடுப்பு கிடைக்காதே என்ன செய்வது என யோசித்துள்ளார். அப்போது பொய் சொல்லி வேலைக்கு மட்டம் போட்டுவிட்டு கால்பந்து போட்டியைக் காணச் சென்றிருக்கிறார் Nina.
பின்னர் போட்டி முடிந்து வீட்டிற்குச் சென்று சென்ற Nina, அடுத்த நாள் காலையில் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார். அப்போது Nina வேலை செய்யும் நிறுவனத்தின் முதலாளி, அவரை மொபைலில் அழைத்து, ''நீ இனி கஷ்டப்பட்டு வேலைக்கு எல்லாம் வரவேண்டாம்'' என்று கூறி விட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.
இதனைக் கேட்டு அதிர்ந்துபோன Nina ஒன்றும் புரியாமல் தவித்துப் போனார். பின்னர் என்ன நடந்தது என விசாரித்த போது தான் அவருக்கு உண்மை தெரிந்திருக்கிறது. கால்பந்து விளையாட்டைப் பார்க்கப் போன அவர், உற்சாக கொண்டாட்டத்தில் இருந்துள்ளார். 60,000 பேருக்கு மேல் விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்த நிலையில், தன்னை யார் கவனிக்கப்போகிறார்கள் என்று நினைத்திருக்கிறார் Nina.
ஆனால், இங்கிலாந்து கோல் போட்டதை Ninaவும் அவரது தோழியும் கொண்டாடியதைச் சரியாக கமெரா ஒன்று ஃபோகஸ் செய்ய, தன் முகத்தை முதலாளி மட்டுமல்ல, உலகமே தன்னை தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறது என்ற உண்மை அப்போதுதான் Ninaவுக்கு புரிந்திருக்கிறது.
ஒரு பக்கம், தான் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்ட சந்தோஷம், மறுபக்கம், தனக்கு வேலை போய்விட்ட சோகம் என இருவித உணர்ச்சிகளில் மூழ்கிப்போயிருக்கிறார் Nina.
மற்ற செய்திகள்