திங்கட்கிழமை லீவு எடுத்தது குத்தமா?.. பெண் பணியாளரை வேலையைவிட்டே தூக்கிய முதலாளி.. அப்புறம் தான் பெண்ணுக்கு அதிர்ஷ்டமே அடிச்சுருக்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் வேலைக்கு லீவு போட்டதால் பெண் ஒருவரை வேலையில் இருந்தே நீக்கியுள்ளார் முதலாளி. இந்நிலையில் இதுகுறித்த நீதிமன்ற விசாரணையில் தீர்ப்பு வெளிவந்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | அஷ்வினின் மன்கட் Try.. பேட்ஸ்மேனுக்கு அல்லு விட்ருச்சு.. அந்த பக்கம் கோலி செஞ்சதுதான்😂..!
இங்கிலாந்தின் கார்டிப் பகுதியில் Christian Donnelly என்பவர் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு செலின் தோர்லி எனும் பெண், சிகை திருத்தும் நிபுணராக பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹாலோவீன் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார் செலின். வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த பார்ட்டியில் கலந்துகொண்ட செலினுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. இதனையடுத்து தன்னுடைய நிலையை விவரித்து முதலாளி Christian Donnelly-க்கு திங்கட்கிழமை மெசேஜ் அனுப்பி இருக்கிறார் செலின்.
அதில்,"ஹாய் கிறிஸ். நான் சொல்வது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும். என்னை மன்னித்துவிடுங்கள். இன்று என்னால் பணிக்கு வரமுடியும் என தோன்றவில்லை. உடல்நிலை இவ்வளவு மோசமாகும் என எதிர்பார்க்கவில்லை. உடல்நிலை சரியாகும் என நினைத்தேன். ஆனால், என்னால் படுக்கையில் இருந்து கூட எழுந்திருக்க முடியவில்லை" என குறிப்பிட்டுள்ளார். இந்த மெசேஜிற்கு பதில் அளித்த Christian Donnelly இனி நீங்கள் வேலைக்கு வரவேண்டாம் என தெரிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
திடீரென தன்னை பணியில் இருந்து நீக்கியதை எதிர்த்து தொழிலாளர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் செலின். இந்த விசாரணையின் போது, மாதவிடாய் காலங்களில் அதீத வலியை எதிர்கொண்டு வருவதாகவும் அதன் காரணமாகவே தன்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை எனவும் செலின் தெரிவித்ததோடு, அதற்கான மருத்துவ ஆவணங்களையும் சமர்பித்திருக்கிறார். இருதரப்பு விசாரணைகளை கேட்டறிந்த நீதிபதி, செலின் தனக்கு உடல்நிலை சரியில்லை என உண்மையான காரணத்தை கூறியே விடுமுறை கேட்டிருப்பதாகவும் அதனால் அவரை பணியில் இருந்து நீக்கியது தவறு எனவும் தீர்ப்பளித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், செலினை எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி வேலையை விட்டு நீக்கியதால் Christian Donnelly-க்கு 3452 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 3.44 லட்ச ரூபாய்) அபராதம் விதித்து உத்தரவிட்டனர். இதற்கு முன்னர் திங்கட்கிழமைகளில் செலின் விடுமுறை எடுத்ததாலேயே இவ்வாறு செய்ததாக Christian Donnelly தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read | வியட்நாம் பொண்ணு.. கூடங்குளம் மாப்பிள்ளை.. கல்யாணம் வேற நாட்டுல.. கைகூடிய காதல்..!
மற்ற செய்திகள்