'47 ஆண்டுகளுக்கு முன்'... காணாமல் போன கணவரின் 'மோதிரம்'... கொரியர் மூலம் நிகழ்ந்த 'அற்புதம்!'... கதறி அழுத மனைவி... 'பரவசமூட்டும் காதல் காவியம்!'
முகப்பு > செய்திகள் > உலகம்கல்லூரிப் பருவத்தில் தவறவிட்ட கணவரின் மோதிரம் 47 ஆண்டுகளுக்குப் பின் மனைவிக்கு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த டெப்ரா மெக்கென்னா என்ற பெண், போர்ட் லேண்டில் தான் பள்ளியில் பயின்று கொண்டிருக்கும் காலத்தில் ஒரு மோதிரத்தைத் தொலைத்துள்ளார். அது அந்தப் பெண்ணின் அப்போதைய காதலரும், தற்போதைய கணவர் ஷானின் மோதிரம் ஆகும். 47 ஆண்டுகளுக்கு முன், அந்த மோதிரத்தை ஷான், மெக்கென்னாவுக்கு கொடுத்துள்ளார். ஆனால், அதை மெக்கென்னா தவறுதலாக தொலைத்துவிட்டார்.
இந்நிலையில், ஃபின்லாந்தில் உள்ள காரினா பூங்காவில், ஊழியர் ஒருவர் பூங்காவை சுத்தம் செய்யும் போது, அந்த மோதிரம் அவருக்கு கிடைத்துள்ளது. மெக்கென்னா மற்றும் ஷான் படித்த பள்ளியின் பெயர் அந்த மோதிரத்தில் பொறிக்கப்பட்டிருந்ததால், பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு, அதன் மூலம் மோதிரத்தை மெக்கென்னாவுக்கு கொரியர் அனுப்பியுள்ளனர்.
மெக்கென்னாவின் கணவர் ஷான் கடந்த 2017 ஆண்டு மரணமடைந்துவிட்டார். இந்நிலையில், கொரியரைப் பிரித்து படித்த மெக்கென்னா, மோதிரத்தைக் கண்டதும் உணர்ச்சி வசப்பட்டு கதறி அழுதார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே ஆச்சரியம் கலந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.