'1918-ல் பூட்டியார் எழுதிய கடிதம்!'... 'அலமாரியில் இருந்து பிரித்து பார்த்த பேத்திக்கு காத்திருந்த ஆச்சரியம்!'.. ‘கண்கலங்க வைத்த நிகழ்வு!’

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

1918-ஆம் ஆண்டு கனேடிய பெண் ஒருவருக்கு அவருடைய பாட்டியின் தாய் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

'1918-ல் பூட்டியார் எழுதிய கடிதம்!'... 'அலமாரியில் இருந்து பிரித்து பார்த்த பேத்திக்கு காத்திருந்த ஆச்சரியம்!'.. ‘கண்கலங்க வைத்த நிகழ்வு!’

Lindsay Doran-Bonk என்கிற பெண்ணுக்கு 100 ஆண்டுகள் பழமையான அந்த கடிதம் கிடைத்துள்ளது. அதை முதலில் எதார்த்தமாக பார்த்தபோது அந்த கடிதத்தை பற்றி அவருக்கு தெரியவில்லை.

ALSO READ: “உலகத்துலயே அதிர்ஷ்டம் கெட்ட 2 கொள்ளையர்கள்!”.. ‘ஹோம் அலோன்’ பட வில்லன்களுடன் ஒப்பிட்டு காவலர் போட்ட வைரல் பதிவு.. மாட்டிக்கொண்ட லட்சணம் வேற லெவல்!

அத்தகைய வரலாற்று சிறப்புமிக்க கடிதம் தன் வீட்டில் இருப்பதை அவர் பெரிதாக உணரவுமில்லை. அவருடைய பாட்டியின் தாயார் (great-grandmother) Marion Elizabeth "Bessie" Forester என்பவர் 1918-ஆம் ஆண்டு ஸ்பானிஷ் ஃப்ளூ என்னும் மிகப்பெரிய பிரபலமான தொற்றுநோய் பரவிய காலகட்டத்தில் அந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்.

woman finds grandma letter penned in 1918 Spanish flu experience

தற்போது உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலில் இருக்கும் இந்த வேளையில் மனிதர்களின் வாழ்வாதாரங்கள், பொருளாதாரம் என அனைத்தும் பாதிக்கப்படத் தொடங்கி, பலர் காப்பாற்ற முடியாத நிலையில் மடியத் தொடங்கினர். உடனடியாக தடுப்பூசி அல்லது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட முடியாத நிலையில் அனைவரும் இடைவெளி விட்டு இருத்தல் மற்றும் வீட்டுக்குள்ளேயே பூட்டிக் கொண்டு முடங்கிக் கிடத்தல், வெளியே சென்றாலும் குறிப்பிட்ட வேலைக்காக வெளியே சென்று விட்டு உடனடியாக வீட்டுக்கு திரும்பி கொள்ளுதல், மாஸ்க் அணிதல் உள்ளிட்டவற்றை தொடக்கத்திலிருந்து பின்பற்றுகிறோம்.

woman finds grandma letter penned in 1918 Spanish flu experience

இப்படித்தான் ஸ்பானிஷ் ஃப்ளூ எனும் கொள்ளை நோய் பயங்கரமானது என்பதை அறிந்து அந்த சூழலில் வாழ்ந்த, கற்ற சில அனுபவத்தைப் பற்றி Marion Elizabeth "Bessie" Forester அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தை தான் அவர் தனது அலமாரியில் வைத்து இருந்துள்ளார். 1918-ம் ஆண்டு இப்போது இருப்பது போல ஒரு நிலைமையில் தான் தனது பாட்டி அந்தக் கடிதத்தை எழுதியுள்ளார் என்கிற எண்ணம்  Lindsay Doran-Bonk-க்கு உருவானது.

woman finds grandma letter penned in 1918 Spanish flu experience

இதனைத் தொடர்ந்து Lindsay Doran-Bonk அந்த கடிதத்தை வாசித்தார். அப்போது தொற்றுநோய் பரவிய காலத்தில் ஒரு கர்ப்பிணியாக கைகளால் செய்யப்பட்ட முகக் கவசங்கள் அணிந்து கொண்டும் பிறந்த குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஊர் ஊராக கணவருடன் அலைந்து திரிந்துள்ள சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது இப்போதுதான் இந்த கடிதத்தை வாசிக்கும் Lindsay Doran-Bonkக்கு புரிய வந்தது. இந்த நிலையில் அப்போதைய சூழலில் Marion Elizabeth "Bessie" Forester குழந்தை பெற்றுக்கொண்டதும் குழந்தை பெற்றுவிட்டு சில வாரங்களுக்குப் பின்னர் தனது 27-வது வயதில் வாழ்க்கையின் பெரும்பகுதியை அனுபவிக்காமல் இவ்வுலகை விட்டுப் பிரிந்திருக்கிறார்.

இதை படித்தவுடன் நெகிழ்ந்து போன Lindsay Doran-Bonk தன்னுடைய பூட்டியார் மீது பாசம் அதிகம் ஏற்பட்டதும் இந்த கடிதம் குறித்து இணையதளத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவுக்கு அடுத்து அவரின் பூட்டியாரை தெரிந்தவர்கள் மற்றும் தூரத்து உறவினர்கள் என பலரும் தொடர்புகொண்டு நினைவுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ALSO READ: “7.30க்கு க்ளாஸ் போகணும்.. ஆனா 7.40க்கு தான் பஸ் வருது.. கஷ்டமா இருக்கு!”.. 'ட்விட்டரில்' மாணவர் வைத்த 'கோரிக்கை'!.. ட்விட்டரிலேயே நடந்த 'நெகிழ வைக்கும்' சம்பவம்!

இப்போது அனைவரும் பேஸ்புக் குரூப் துவங்கி இதைப் பற்றி பேசி சிலாகித்துக் கொண்டிருக்கின்றனர். 27 வயதில் தனது பூட்டியார் (பாட்டியின் தாய்) Marion Elizabeth "Bessie" Forester இறந்து போனார் என்றாலும் இத்தனை பெரிய சந்ததியை அவர் விட்டுச் சென்றார் என்பது தனக்கு மகிழ்ச்சி என்று Lindsay Doran-Bonk தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்