பிதாமகன் லேகியம் சாப்டாங்களோ.. காத்த பிரிச்சி.. கோடில காசு பார்த்த ‘வைரல்’ பெண்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

முன்னாள் டிவி பிரபலம் மற்றும் டிக்டாக் பிரபலம் ஒருவர், தன்னுடைய ஆசன வாயுவை விற்றே கோடீஸ்வரி ஆகியுள்ள சம்பவம் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

பிதாமகன் லேகியம் சாப்டாங்களோ.. காத்த பிரிச்சி.. கோடில காசு பார்த்த ‘வைரல்’ பெண்!!

யுனைடெட் ஸ்டேட்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதாகும் ஸ்டெஃபானி மேட்டோ, ரியாலிட்டி ஷோ மற்றும் டிக் டாக் மூலம் அதிக பிரபலம் ஆனவர். கடந்த சில தினங்களுக்கு முன், தனது வயிறு மற்றும் நெஞ்சு பகுதியில், அதிக வலி ஏற்பட்டதன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அப்போது அவரது உடலை பரிசோதித்த மருத்துவர்கள், பீன்ஸ், முட்டை மற்றும் புரோட்டீன் ஷேக் உள்ளிட்ட உணவு வகைகளை அளவு கடந்து உட்கொண்டுள்ளார்.

அதிகரித்த டிமாண்ட்

இதனால் தான் ஸ்டெஃபானி மேட்டோ கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்கு காரணம் என்ன என்பது தான், பலருக்கும் வினோத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் முதல், தனது ஆசன வாயுவை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளார் ஸ்டெஃபானி. இதனைத் தொடர்ந்து, நாளுக்கு நாள் இதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.

உணவு பழக்கத்தை மாற்றிய பிரபலம்

கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு 50 பாட்டில் வரை விற்பனை செய்து வந்துள்ளார் ஸ்டெஃபானி மேட்டோ. அது மட்டுமில்லாமல், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், உலகின் நம்பர் 1 'fartrepreneur' என்றும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார். இதற்கிடையில், ஒரு வாரத்திற்கு சுமார் 90 பேர் வரை, ஸ்டெஃபானி மேட்டோவின் ஆசன வாயுவிற்கு டிமாண்ட் செய்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, தனது உணவு பொருட்களையும் அதிகப்படுத்தியுள்ளார் ஸ்டெஃபானி.

கோடிக்கணக்கில் வியாபாரம்

இதன் காரணமாக தான், அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவர் ஒரு வாரத்தில், 38,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 50 லட்சம்), வரை சம்பாதித்துள்ளார். மொத்தத்தில், இந்திய மதிப்பில் சுமார் 1.50 கோடி ரூபாய் வரை ஸ்டெஃபானி, தனது ஆசன வாயுவை விற்று சம்பாதித்துள்ளார்.

இனி பிசினஸ் இல்லை

இந்நிலையில், இது பற்றி பேசிய ஸ்டெஃபானி, 'அளவு கடந்த உணவை உட்கொண்டதன் காரணமாக, எனக்கு அடிக்கடி மூச்சு தொடர்பான பிரச்சனைகள் உருவானது. முதலில், எனக்கு ஹார்ட் அட்டாக் உருவாகி விட்டதோ என பயந்தேன். இதனால், நண்பர்களை அழைத்து, என்னை மருத்துவமனை அழைத்துச் செல்லும் படி கூறினேன். அங்கு சென்ற பிறகு தான், எனக்கு ஹார்ட் அட்டாக் என எதுவுமில்லை என தெரிந்தது.

தொடர்ந்து, எனது உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதனால், எனது பிசினஸ் முடிவுக்கு வருகிறது' என ஸ்டெஃபானி மேட்டோ தெரிவித்துள்ளார். இதனால், இனிமேல் அவர் தனது ஆசன வாயு விற்று பணம் பார்க்கும் பிசினஸை நிறுத்தியுள்ளார்.

STEPHANIE MATTO, BUSINESS

மற்ற செய்திகள்