இரண்டாம் உலகப்போரின் முக்கிய சீக்ரட் ஏஜெண்டை பல வருஷமா தேடிய அதிகாரிகள்.. தன்னோட பாட்டி எழுதிய டைரியை படிச்ச பேத்திக்கு ஏற்பட்ட ஷாக்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இரண்டாம் உலகப்போரில் ரகசிய உளவாளியாக செயல்பட்ட நபர் ஒருவரை பல வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்து அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கு காரணமாக அமைந்திருக்கிறது ஒரு டைரி.
பணிப்பெண்
இரண்டாம் உலகப் போரின்போது தென்மேற்கு இங்கிலாந்தில் பிரிஸ்டல் அருகே கூம்பே டிங்கிள் பகுதியில் வசித்துவந்திருக்கிறார் புளோரன்ஸ் கியர்ரிங் என்னும் பெண்மணி. இவர் அருகில் உள்ள வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்திருக்கிறார். புளோரன்ஸ் கியர்ரிங்-ற்கு டைரி எழுவது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. தினந்தோறும் தான் சந்தித்த நிகழ்வுகள், போர் குறித்த செய்திகள், பனி பெய்த நாட்கள், என்ன சமையல் செய்தேன் என அனைத்தையும் விவரமாக தனது டைரியில் எழுதிவந்திருக்கிறார் புளோரன்ஸ்.
இவர் பணிப்பெண்ணாக வேலை செய்த வீட்டின் உரிமையாளர் ஐரீன் தோர்ன்டன் என்னும் பெண்மணி ஆவார். பெல்ஜியத்தை சேர்ந்த இவர் ஜெர்மானிய படையெடுப்பின் காரணமாக இங்கிலாந்தை சேர்ந்த எரிக் என்பவரை மணந்துகொண்டு இங்கிலாந்தில் குடிபெயர்ந்திருக்கிறார்.
ரகசிய ஏஜெண்ட்
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானிய படைகளின் ரகசிய திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ள ரகசிய உளவாளிகளை வேலைக்கு சேர்த்தது அந்நாட்டு ராணுவம். இவர்களுக்கு என தனியாக பெயர் கொடுக்கப்பட்டு அதன்படியே தகவல் பரிமாற்றமும் நடைபெற்றது. இதில் தேர்ந்த ஒற்றர்கள் டபுள் ஏஜெண்டாக பணியாற்றினர். அதாவது ஜெர்மானிய படையில் ஒற்றர்களாக வேலைக்கு சேர்ந்து இங்கிலாந்து ராணுவத்திற்காக பணிபுரியும் ஆபத்தான பணி இவர்களுடையது.
அப்படி ஒருவர் தான் ஏஜெண்ட் முல்லட். இங்கிலாந்து ராணுவத்தில் ஏஜெண்ட் முல்லட் என்பது மிகவும் பிரசித்திபெற்ற பெயராகும். பல ரகசிய ஆப்பரேஷன்களில் இயங்கிய முல்லட்டின் உண்மையான பெயர் என்ன என்பது யாருக்கும் தெரியாது. சமீபத்தில் அவருடைய கோப்புகளை ஆய்வு செய்துவந்த நிபுணர்கள் அவரைப்பற்றிய தகவல்கள் அனைத்தையும் சேகரித்திருக்கின்றனர்.
டைரி
இந்நிலையில், புளோரன்ஸ் மரணித்த பிறகு அவருடைய டைரியை அவரது மகன் பத்திரப்படுத்தி வந்திருக்கிறார். அவருக்கு பிறகு புளோரன்ஸ்-ன் பேத்தியான டெப்ரா பிரிட்டன் என்னும் பெண்மணிக்கு கிடைத்திருக்கிறது அந்த டைரி. அதனை படிக்க துவங்கிய பிரிட்டனுக்கு பல ஆச்சரியகரமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அப்போது டைரியில் இருந்த ஒரு பெயர் அவருடைய சந்தேகத்தை கிளறியிருக்கிறது.
தனது பாட்டி வேலைபார்த்து வந்த வீட்டின் உரிமையாளரான ஐரீன் என்பவரது மருமகனான ரொனால்ட் பற்றி விசித்திர தகவல்களை டைரி மூலமாக அறிந்திருக்கிறார் பிரிட்டன். பின்னர் இந்த டைரியை வெளியுலகத்திற்கு அவர் கொண்டுவர, ரொனால்ட் தான் அந்த முல்லட் எனும் பெயர்கொண்ட ஏஜெண்ட் என்பது தெரிய வந்திருக்கிறது.
இங்கிலாந்து அரசுக்காக டபுள் ஏஜெண்டாக பணியாற்றிவந்த முல்லட் என்பவரை டைரி ஒன்றின் மூலமாக அந்நாட்டு அரசு கண்டுபிடித்திருப்பது தற்போது அங்கே வைரலாக பேசப்பட்டு வருகிறது.
மணமகள் தேவை.. முழு பயோ டேட்டாவுடன் போஸ்டர் அடிச்சு ஒட்டிய இளைஞர்.. வியந்துபோன மக்கள்..!
மற்ற செய்திகள்