இறந்தவிட்டதாக கூறிய மருத்துவர்கள்... இறுதிச் சடங்கில் குளிப்பாட்டும் போது... பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்... அதிர்ச்சியான குடும்பத்தினர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இறந்ததாக கூறப்பட்ட  பெண் ஒருவர் இறுதிச் சடங்கில் குளிப்பாட்டும்போது உயிருடன் இருந்த சம்பவம் அவர்களத குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இறந்தவிட்டதாக கூறிய மருத்துவர்கள்... இறுதிச் சடங்கில் குளிப்பாட்டும் போது... பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்... அதிர்ச்சியான குடும்பத்தினர்!

பாகிஸ்தான் நாட்டின் காராச்சியில் அப்பாஸி ஷாகீத் மருத்துவமனையில் 50 வயதான ரஷீதா பீபீ என்றப் பெண் உடல்நலக் கோளாறால் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், அந்தப் பெண் இறந்துவிட்டதாக கூறிய மருத்துவர்கள், அவருக்கு இறப்பு சான்றிதழும் வழங்கியுள்ளனர். அதன்பின்னர், அந்தப்பெண்ணை வீட்டுக்கு எடுத்துவந்த குடும்பத்தினர், கடந்த புதன்கிழமை அன்று அவருக்கு இறுதிச் சடங்கு செய்ய ஆரம்பித்தனர். சடங்கின் ஒரு பகுதியாக, அந்தப் பெண்ணை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சேர்ந்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தனர். 

அப்போது, இந்த அறையில் இருந்த பெண் ஒருவர், ரஷீதா பீபீயின் கால் மூட்டுகளில் அசைவு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், ரஷீதாவின் மருமகள் ஷபனாவிடம் கூற, உடனடியாக குடும்பத்தினர், ரஷீதாவின் நாடியைப் பிடித்து பார்த்தனர். அப்போது உயிர் இருப்பதாக இருந்த அறிகுறி தென்பட்டதை அறிந்து, உறைந்து நின்ற குடும்பத்தினர், உடனடியாக ரஷீதா பீபீ சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு இறப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்ட அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

WOMAN, DEAD, FUNERAL, BATH