உணவால் இறந்ததாக கருதிய உறவினர்கள்.. ஒரு மாதம் கழித்து விலகிய மர்மம்.. கண்ணீர் மல்க கதறிய கணவர்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கிரேட்டர் மான்செஸ்டர் அருகே ஸ்டாக்போர்ட் என்னும் நகரை சேர்ந்தவர் கெல்லி க்ளீஸன் (Kelly Gleeson). இவர் கடந்த மாதம் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

உணவால் இறந்ததாக கருதிய உறவினர்கள்.. ஒரு மாதம் கழித்து விலகிய மர்மம்.. கண்ணீர் மல்க கதறிய கணவர்!!

Images are subject to © copyright to their respective owners

முன்னதாக, கெல்லி உண்ட உணவு Food Poison ஆனதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என குடும்பத்தினர் கருதி வந்துள்ளனர். இறப்பதற்கு சில நாட்கள் முன்பே அவரது உடல்நிலையும் சற்று சோர்ந்து போயிருந்ததாக சொல்லப்படுகிறது. என்ற போதிலும் இது உறுதியாகாத காரணத்தினால் கெல்லியின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணையும் நடைபெற்று வந்ததாக தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில் சுமார் ஒரு மாதம் கழித்து கெல்லி மரணம் குறித்த உண்மை காரணம் என்ன என்பது தெரிய வந்து பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

Pulmonary embolism என்ற பாதிப்பு ஏற்பட்டு கெல்லி உயிரிழந்து போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நுரையீரல் தமனியில் ரத்த உறைவு ஏற்பட்டு, நுரையீரலின் ஒரு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக சிகிட்சை அளிக்க வேண்டும் என்றும், அப்படி இல்லையென்றால் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும் சூழலும் உருவாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.

Images are subject to © copyright to their respective owners

அதே போல, திடீர் மூச்சுத் திணறல், மார்பு வலி, இருமல் உள்ளிட்டவை இதன் அறிகுறிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. கெல்லியின் மரணம் குறித்த காரணம் அறிந்து முற்றிலுமாக உடைந்து போயுள்ளார் அவரது கணவர் ஜெர்ரி. நான் முற்றிலும் உடைந்து போய்விட்டேன் என்றும், 22 ஆண்டுகள் ஒன்றாக இருந்த என மனைவியை நான் நேசிப்பதை ஒரு போதும் நிறுத்தவில்லை என்றும் மனம் உடைந்து குறிப்பிட்டுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners

மேலும், கெல்லி - ஜெர்ரி தம்பதியநரின் மகளும், தனக்கு ஒரு தோழியை போல இருந்த தாய் இறந்தது வேதனையை தருவதாகவும் தனக்காக எல்லாவற்றையும் செய்த தாய் இல்லை என்றும் வேதனையில் தெரிவித்துள்ளார்.

WIFE, FOOD

மற்ற செய்திகள்