தீராத பல்வலி... கொஞ்சம் கூட யோசிக்காம பெண் எடுத்த முடிவு.. இருந்தாலும் இது ஓவருங்க.. திகைத்துப்போன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இங்கிலாந்தில் தீராத பல்வலி காரணமாக பெண் ஒருவர் தன்னுடைய 13 பற்களை தானே அகற்றியுள்ளனர். இது உள்ளூர் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தின் சஃபோல்க்-ல் உள்ள செயின்ட் எட்மண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் டேனியல் வாட்ஸ். 42 வயதான இவர் பல ஆண்டுகளாக ஈறு வலியால் தவித்து வந்திருக்கிறார். உள்ளூரில் இருந்த பல் மருத்துவமனையும் கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டதால், அவரால் உடனடியாக சிகிச்சை பெறமுடியவில்லை. மேலும், வெளியூர் சென்று சிகிச்சை பெறவும் தன்னிடம் வசதி இல்லாததால், தன்னுடைய பற்களை தானே அகற்றியுள்ளனர் பெண்மணி.
பல்வலி
ஒன்று, இரண்டு அல்ல மொத்தம் 13 பற்களை வாட்ஸ் அகற்றியிருக்கிறார். இதன் காரணமாக அவர் இப்போதெல்லாம் சிரிக்க கூட தயங்குவதாக தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்,"நான் இப்படித்தான் வாழ்ந்து வருகிறேன். தினமும் வலி நிவாரணிகளை பயன்படுத்துகிறேன். பொது இடங்களில் சிரிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவருகிறேன். எனக்கு நன்கு தெரிந்தவர்களிடம் கூட நான் பேசுவதை வெறுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளேன்" என்றார்.
இதனிடையே ஒருநாள் உள்ளூர் ஊடகம் ஒன்றில் பேசிய வாட்ஸ், தனது சிரமம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் உள்ளூரில் பல் மருத்துவமனை இருந்தால் தனக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என கவலையுடன் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானதை தொடர்ந்து உள்ளூர் கவுன்சிலர் கேடி பார்க்கர் தீராத பல்வலியால் பாதிக்கப்பட்டுள்ள வாட்ஸ்க்கு உதவ முன்வந்திருக்கிறார். தொடர்ந்து வாட்ஸின் சிகிச்சைக்கு பார்க்கர் நிதிதிரட்டி உள்ளார்.
உதவி
இதன்மூலம், சுமார் 1200 அமெரிக்க டாலர்கள் நிதி சேர்ந்துள்ளதாக பார்க்கர் தெரிவித்திருக்கிறார். இதன்மூலமாக டேனியலுக்கு சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது 14 பற்களை கொண்டுள்ள டேனியலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேலும் 8 பற்கள் அகற்றப்பட இருக்கிறது. அதன்பிறகு செயற்கை பற்கள் அவருக்கு பொருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய மருத்துவ செலவுகளுக்கு பலரும் நன்கொடை அளித்தது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய வாட்ஸ்,"எனக்கு அவர்களை யார் என்றே தெரியாது. இருப்பினும் என்னுடைய உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொண்டு எனக்கு உதவியிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்" என்றார். இந்நிலையில் ஆகஸ்டு மாத மத்தியில் வாட்ஸ்-க்கு செயற்கை பற்கள் பொருத்தப்பட இருக்கின்றன.
மற்ற செய்திகள்