கீரைகளை சுத்தம் செய்ய வாஷிங் மெஷினா..? இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.? இணையத்தை தெறிக்கவிட்ட பெண்மணி.!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க சேர்ந்த பெண் ஒருவர் கீரையை சுத்தம் செய்வதற்கு வாஷிங்மெஷினை பயன்படுத்திய வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
எந்திர உற்பத்திக்கு பிறகு வீட்டு உபயோக பொருட்களுள் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய விஷயங்களாக பிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, மிக்ஸி, உள்ளிட்ட சாதனங்கள் இருக்கின்றன. முன்னதாக கிரைண்டர் இந்த வேலையைச் செய்து வந்தாலும், தற்போது மைக்ரோ ஓவன் கூடுதலாக இந்த லிஸ்டில் இணைந்திருக்கிறது.
எனினும் இப்போது இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பலரும் இணையதளத்தில் வீடியோக்களை பார்த்து, புதிய புதிய பரிச்சாத்திய முயற்சிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் அரிசொனா மாநிலம் கான்வே நகரை சேர்ந்த பெண் ஒருவர் டிக் டாக் வீடியோக்கள் மூலம் புகழ் பெற்றவர்.
இவர் சாலட் தயாரிப்பதற்காக கீரைகளை சுத்தம் செய்யக்கூடிய வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். கீரைகளை இப்படியும் சுத்தம் செய்யலாம் என்கிற அந்த வீடியோவை ஆஷ்லே எக்கோல்ஸ் என்கிற இந்த பெண்மணி டிக் டாக்கில் பதிவிடுவது பெரிய ஆச்சரியம் இல்லை. ஆனால், இவர் வீட்டில் துணிகளை துவைப்பதற்காக வைத்திருக்கக்கூடிய வாஷிங் மெஷினில் தான் நிறைய கீரைகளை வைத்து வாஷிங்மெஷினில் இருக்கும் அந்த டெலிகேட் பட்டனை அழுத்துகிறார். 55 நிமிடங்கள் ஓடிய பின்பு வாஷிங்மெஷினில் இருந்து ஃபிரஷ்ஷான கீரைகளை எடுப்பது போல் இந்த வீடியோ இருக்கிறது.
இதை பார்த்த பலரும் என்னப்பா இது வாஷிங் மிஷினில் இருந்து கீரைகளை சுத்தம் செய்கிறார்கள்..? என்று வியப்பு கலந்த குழப்பத்துடப் பார்ப்பதுடன், இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் பார்வையாளர்களுக்கு மேல் பகிர்ந்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்