கூகுள் Map .. 9 வருட Gap.. இரண்டுக்கும் நடுவுல இப்டி ஒரு Connect இருக்கா?.. வைரல் ஃபோட்டோ.!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, நம்மை சுற்றி நடைபெறும் பல விஷயங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி கொண்டே இருக்கும்.
அவற்றில் விநோதமாகவோ அல்லது அதிர்ச்சிகரமாகவோ, மகிழ்ச்சியாகவோ இப்படி வித விதமான வகையில் செய்திகள் அல்லது வீடியோக்கள், மக்கள் மத்தியில் பகிரப்பட்டு வரும். அப்படி ஒரு சூழ்நிலையில், 9 ஆண்டுகள் இடைவெளியில் பெண் ஒருவர் செய்த செயல் தொடர்பான புகைப்படங்கள், தற்போது இணையத்தில் பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது.
கூகுள் மேப் என்பது முன்பின் தெரியாத இடத்திற்கு செல்ல மிக அவசியமான ஒரு செயலியாக பார்க்கப்படுகிறது. இதில், கூகுள் ஸ்ட்ரீட் வியூ என்ற வசதி உள்ளது. அதன் மூலம், சில நகரங்களின் நிஜ புகைப்படங்களை கூட பார்க்க முடியும். சில நகரங்களில் இந்த வசதி செயல்படும் என்ற நிலையில், கூகுள் ஸ்ட்ரீட் வீவ் கார் மூலம் அடிக்கடி ஒவ்வொரு நகரங்களின் தெருக்களையும் அப்டேட் செய்து கொண்டிருப்பார்கள்.
இதனிடையே, இந்த கூகுள் மேப் ஸ்ட்ரீட் வீவில் பெண் ஒருவர், ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில் அதே இடத்தில் நின்ற விஷயம், அதிசயமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு, லண்டனில் விக்டோரியா பிளேஸ் என்னும் பகுதியில், லீன் கார்ட்ரைட் என்ற பெண், சாலையை கடப்பதற்காக சிக்னல் கம்பம் முன்பு கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து, அதாவது 2018, ஆம் ஆண்டு தன்னுடைய 41 வது வயதில், அதே விக்டோரியா பிளேஸ் பகுதியில் சிக்னல் கம்பத்திற்கு அருகே கையில் பையுடன் சாலையை கடப்பதற்காக லீன் அங்கே நின்று கொண்டிருக்கிறார். ஒன்பது ஆண்டுகள் இடைவெளியில், தற்செயலான நேரத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களிலும் ஒரே பெண் இருப்பது பலரையும் வியப்படைய செய்துள்ளது.
இது தொடர்பான புகைப்படத்தை லீன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுபற்றி பேசும் லீன், "இதை பார்க்கும் போது வேடிக்கையாகும் வினோதமாகவும் இருக்கிறது. மக்களுக்கும் நான் ஏதோ டைம் ட்ராவல் செய்வது போல்தான் தோன்றும். எனது கணவர் தான் இதனை முதன் முதலில் கண்டறிந்தார்.
இது பற்றி எனது அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கூறிய போது அவர்கள் என்னை வேடிக்கையாக பார்த்தார்கள். முதலில் இதனை பகிர வேண்டாம் என நினைத்து தற்போது நான் பேஸ்புக்கில் பகிர முடிவு செய்தேன். இது எல்லோருக்கும் நடந்திருக்குமா என தெரியவில்லை. இனி அந்த இடத்தை கடக்கும் போது சிரிப்பு தான் வரும்" என லீன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்