ரூ.500-க்கு வாங்கிய Chair-ஐ ரூ.16 லட்சத்துக்கு விற்ற பெண்.. ‘நீங்க நம்பலனாலும் அதான் நெசம்’.. அப்படியென்ன ஸ்பெஷல்..?
முகப்பு > செய்திகள் > உலகம்பெண் ஒருவர் 500 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலியை 16 லட்ச ரூபாய்க்கு விற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பழைய நாற்காலி
இங்கிலாந்து நாட்டின் பிரைட்டன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பழைய நாற்காலியை 500 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். நீண்ட வருடங்களாக அவரது வீட்டில் அது சும்மாவே கிடந்துள்ளது. இந்த சமயம் அப்பெண்ணின் வீட்டுக்கு வந்த ஒருவர் இந்த நாற்காலியை பார்த்துள்ளார். அப்போது அந்த நாற்காலியில், 20-ம் நூற்றாண்டில் இருந்த ஒரு பள்ளியின் பெயர் பதிக்கப்பட்டுள்ளதை பார்த்துள்ளார்.
ஆச்சரிய தகவல்
இதனால் ஆச்சர்யமடைந்த அவர் உடனே அது குறித்து ஆய்வு செய்துள்ளார். அப்போது கடந்த 1902-ம் ஆண்டு ஆஸ்திரியாவை சேர்ந்த கோலோமன் மோசர் (Koloman Moser) என்ற கலைஞர் இந்த நாற்காலியை உருவாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.
மகிழ்ச்சியில் திக்குமுக்காடி போன பெண்
இதுகுறித்து தகவலறிந்த வாள்களை ஏலம் விடும் நிறுவனம் ஒன்று சுமார் 16.4 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த நாற்காலியை வாங்கியுள்ளது. இதனால் அப்பெண் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளார். 500 ரூபாய்க்கு வாங்கிய நாற்காலி 16 லட்சம் ரூபாய்க்கு விற்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போ 500 கோடிக்கு அதிபதியா இருக்க வேண்டியவங்க! GH-ல கேட்க ஆள் இல்லாம இருந்துருக்காங்க...
'ஆனந்த் மகிந்திரா' வை அசரவைத்த ஆட்டோ டிரைவர்.. நேரில் அழைத்து நெகிழ்ந்து போன டிஜிபி..
மற்ற செய்திகள்