கீழ கிடந்த ஒரு டாலர்... ஆசையா எடுத்த பெண்ணின் உடலில் ஏற்பட்ட மாற்றம்.. டாக்டர்கள் சொன்னதை கேட்டு மிரண்டுபோன கணவர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கீழே கிடந்த ஒரு டாலர் நோட்டை ஆசையாக எடுக்கச் சென்ற பெண், உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பலரையும் திடுக்கிட செய்திருக்கிறது.
அமெரிக்காவை சேர்ந்தவர் ரென்னே பார்சன். இவர் சமீபத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் காரில் வெளியே சென்றிருக்கிறார். அப்போது இயற்கை உபாதைக்காக அருகில் இருந்த உணவகத்துக்கு சென்றிருக்கிறது இந்த குடும்பம். கழிப்பறைக்கு சென்ற பார்சன், வாசலில் ஒரு டாலர் நோட்டு கிடப்பதை பார்த்திருக்கிறார். உடனே கீழே குனிந்து அதனை எடுத்திருக்கிறார். ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட நிகழ்வுகள் மொத்த குடும்பத்தையே நடுங்க செய்துவிட்டது.
அதிர்ச்சி
கீழே கிடந்த டாலரை கையில் எடுத்தவுடன், அவரது உடல் மரத்துப்போக ஆரம்பித்திருக்கிறது. கொஞ்ச நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் செய்வதறியாது திகைத்திருக்கிறார் பார்சன். இதனை கண்ட அவரது கணவர், பார்சனை தொட அவருக்கும் உடலில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இருப்பினும் சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக அவசர அழைப்பு எண்ணான 911க்கு போன் செய்து நடந்ததை சுருக்கமாக விவரித்திருக்கிறார். அவர்களது உதவியுடன் தனது மனைவியை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற அவர் பார்சனை அங்கே அனுமதித்திருக்கிறார்.
சிகிச்சை
இதனை தொடர்ந்து பார்சன் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அவருக்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. சில மணி நேரத்துக்கு பிறகு அவரது உடல்நிலை சீராகியிருக்கிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள பார்சன்,"கீழே கிடந்த ஒரு டாலர் நோட்டை எடுத்தவுடன் எனது உடலில் ஏதேதோ மாற்றங்கள் ஏற்படுவதை உணர்ந்தேன். எனது தோள்பட்டைகள் இறங்குவது போல் இருந்தது. கைகள் மரத்துப்போனது. விழித்திருக்க போராடினேன். என்னை தொட்ட கணவருக்கும் இதுபோன்ற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. நல்லவேளையாக நான் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டேன்" என்றார்.
இந்நிலையில், பார்சனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இதுகுறித்து பேசுகையில், அந்த டாலர் நோட்டில் ஃபெண்டானில் என்ற மருந்து தடவப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். பொதுவாக அறுவை சிகிச்சையின் போது, நோயாளிக்கு இந்த மருந்து அளிக்கப்படும். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகச்சிறிய அளவு கூடுதலாக எடுத்துக்கொண்டாலும் இது ஆபத்தான போதைப்பொருளாக மாறிவிடும் என எச்சரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.
அமெரிக்காவில் கீழே கிடந்த டாலரை எடுத்த பெண், உயிருக்கு போராடிய நிலையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டது அந்நாடு முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.
Also Read | பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு.. இந்தியரான ரிஷி சுனக் 3-வது சுற்றிலும் வெற்றி.. முழு விபரம்..!
மற்ற செய்திகள்