ஒரேயொரு ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. 50 மில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியான பெண்.. குழம்பிப்போன அதிகாரிகள்.!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் வீடு வாங்க முயன்ற பெண்ணுக்கு வினோதமான அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதிகாரிகளே குழப்பத்தில் தவித்துள்ளனர்.
Also Read | ஒரு நொடில வானிலை மாறிடுமாம்.. மக்களை திகைக்க வைக்கும் வானவில் மலை.. பின்னாடி இருக்கும் சுவாரஸ்ய உண்மை.. !
ஷாக்
அமெரிக்காவின் நெவேடா மாகாணத்தில் அமைந்திருக்கிறது ரெனோ பகுதி. இங்குள்ள ஒரு வீட்டை வாங்க நினைத்திருக்கிறார் பெண்மணி ஒருவர். இதற்காக 594,481 அமெரிக்க டாலர்கள் செலவழித்திருக்கிறார். பத்திர பதிவின்போது அவருக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அந்த பத்திரத்தில் வீட்டுடன் சேர்த்து அருகில் அமைந்திருக்கும் 84 வீடுகள் மற்றும் பொதுவான இரண்டு இடங்களும் அந்த பெண்மணிக்கு சொந்தம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.
அந்த 84 வீடுகள் மற்றும் பொதுவான பகுதி ஆகியவற்றின் மதிப்பு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதுபற்றி அந்த பெண்ணுக்கு தெரியவரவே, அவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார். இதுபற்றி சொத்தை தன்னிடம் விற்ற அதிகாரிகளிடம் அவர் கேட்கவே, ஏதோ தவறு நடைபெற்றுள்ளதாகவும் அது விரைவில் சரி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஸ்பெல்லிங் மிஸ்டேக்
அந்த 84 வீடுகளை ஏற்கனவே சிலர் வாங்கியிருக்கின்றனர். குறிப்பிட்ட வீட்டை அந்த பெண்மணிக்கு பதிவு செய்யும் போது, பதிவு நிறுவனம் சொத்தின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டிருக்கிறது. இதுவே இத்தனை குழப்பத்துக்கும் காரணமாக அமைந்திருக்கிறது. இது உடனடியாக சரி செய்யப்படும் எனத் தெரிவித்திருக்கும் அதிகாரிகள், தவறுதலாக கிடைத்த சொத்தை அந்த பெண்மணி உரிமை கொண்டாடலாம் எனவும் ஆனால் இந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு அவருக்கு எதிராகவே அமையும் என்கின்றனர் அதிகாரிகள்.
இதுகுறித்து பேசிய வாஷோ கவுண்டியின் தலைமை துணை மதிப்பீட்டாளர்
கோரி பர்க்." இந்த குழப்பத்திற்கு காரணம் லாஸ் வேகாஸில் அமைந்துள்ள நிறுவனத்தால் செய்யப்பட்ட எழுத்துப் பிழையாகத் தெரிகிறது. வேறு ஒருவரின் சொத்து விபரங்கள் தவறுதலாக அந்த பெண்ணுடைய பத்திரத்தில் காபி பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் உடனடியாக இந்த பிழையை திருத்த வேண்டும். அந்த பெண்மணி இந்சொத்தை ஒப்படைக்க மறுப்பு தெரிவிக்கலாம். ஆனால், இதுவரை அவர் தரப்பில் அப்படி ஏதும் தெரிவிக்கப்படவில்லை. ஒருவேளை இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றாலும் அவருக்கு தோல்வியே கிடைக்கும்" என்றார்.
Also Read | "நான்கூட டாக்டர் தான்".. மேட்ரிமோனியில் வலைவிரித்த இளைஞர்.. நம்பிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி..!
மற்ற செய்திகள்