"அவரு அப்ப சாகல".. 100 வருஷம் முன்னாடி நடந்த குற்றம்.. கடிதங்கள் மூலம் இளம்பெண் கண்டுபிடிச்ச திடுக்கிடும் விஷயம்!!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றம் ஒன்றின் தொடர்பாக இளம்பெண் ஒருவர் தற்போது கண்டுபிடித்துள்ள விஷயம், பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

"அவரு அப்ப சாகல".. 100 வருஷம் முன்னாடி நடந்த குற்றம்.. கடிதங்கள் மூலம் இளம்பெண் கண்டுபிடிச்ச திடுக்கிடும் விஷயம்!!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "6 பந்தில் 6 சிக்ஸ்".. அரங்கையே திருப்பி பார்க்க வெச்ச கிரிக்கெட் வீரர்.. அடிச்சு முடிச்சதும் நடந்த வைரல் சம்பவம்!!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியை சேர்ந்தவர் Chelsey Brown. இவர் சமீபத்தில் சில கடிதங்கள், டயரி உள்ளிட்டவற்றை கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. பழைய பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையில் இருந்து இவற்றை அவர் வாங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில், இதன் மூலம் சில அதிர்ச்சியூட்டும் தகவல்களும் Chelsey -க்கு வந்து சேர்ந்துள்ளது. இது தொடர்பாக Chelsey வெளியிட்டுள்ள வீடியோவின் அடிப்படையில் உள்ள தகவல்களின் படி, கடந்த 1901 ஆம் ஆண்டு, தபால் நிலையம் ஒன்றில் கொள்ளையடித்துள்ளது. அந்த சமயத்தில், இந்த கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிகிறது. மேலும் அந்த நபரின் பெயர் ஜேம்ஸ் என்றும் முதலில் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Woman about crime happened before 100 years reportedly

Images are subject to © copyright to their respective owners.

ஆனால், செல்சிக்கு கிடைத்த கடிதங்களின் அடிப்படையில், அந்த கொள்ளையர்கள் கூட்டத்தில் இருந்து ஜேம்ஸ் என்ற நபர் சாகவில்லை என்பதும் அவர் வங்கிக் கொள்ளை சம்பவம் நடந்த சில தினங்களில் ஸ்கட்லாந்திற்கு தப்பித்துச் சென்றதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், ஜேம்ஸ் என்ற நபருக்கு அவரது முன்னாள் மனைவி கடிதம் எழுதி இருப்பதும், வேறொரு நபருக்கு வங்கிக் கொள்ளை சம்பவத்திற்கு பின்னர் ஜேம்ஸ் கடிதம் எழுதி இருப்பதும் உறுதியாகி இருப்பதால் ஜேம்ஸ் உயிருடன் தான் இருந்துள்ளார் என செல்சி தெரிவிக்கிறார்.

100 ஆண்டுகளுக்கு முன்பு, இறந்ததாக கருதப்பட்ட கொள்ளையர்களில் ஒருவர், பின்னர் உயிருடன் வலம் வந்தது பற்றி கடிதங்கள் மூலம் இளம்பெண் ஒருவர் தற்போது கண்டுபிடித்துள்ளார். இது தொடர்பாக இன்னும் தகவல்களை செல்சி அறிய முயல்வதாகவும், மேலும் ஜேம்ஸ் என்ற நபர் நிறைய பெயர்களுடன் அந்த சமயத்தில் வலம் வந்ததாகவும் செல்சி குறிப்பிட்டுள்ளார்.

Woman about crime happened before 100 years reportedly

Images are subject to © copyright to their respective owners.

இத்தனை ஆண்டுகள் கழித்து முன்பு நடந்த குற்றம் குறித்த தகவலை பழைய கடிதங்கள் மூலம் பெண் ஒருவர் தூசி தட்டியுள்ள விஷயம், பலரையும் மிரண்டு போக வைத்துள்ளது. முன்னதாக, இது தொடர்பான வழக்கு அந்த சமயத்தில் எதுவரை நடந்திருக்கலாம் என்பதை அறிந்து கொள்ளவும் பலர் ஆவலாக உள்ளனர்.

Also Read | "அஸ்வின் -அ Face பண்ணியே ஆகணுமே".. டூப்ளிகேட் அஸ்வினை கையில் எடுத்த ஆஸ்திரேலியா.. "யாருப்பா இந்த பையன்?

WOMAN, CRIME

மற்ற செய்திகள்