40 நிமிடங்கள் கோமாவில்.. போராடி நம்பிக்கை இழந்த மருத்துவர்கள்.. ஆவியாக தனது வீட்டுக்கே சென்ற பெண்..? கடைசியில் நடந்த அற்புதம்.!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் பெண் ஒருவர் கோமாவில் இருந்த போது தன்னுடைய ஆவி, தன் தோழியை சந்தித்து பேசியதாக குறிப்பிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read | "அன்புள்ள அப்பா அப்பா..".. மகனை பைக்கில் அழைத்துப் போகும் போது தந்தை செய்த செயல்.! கலங்க வைத்த வீடியோ!!..
நியூயார்க் போஸ்ட், டெய்லி மெயில் என பல வெளிநாட்டு செய்தி தளங்களில் ரிப்போர்ட் செய்யப்பட்டு இருக்கும் இந்த செய்தியில், Kirsty Bortoft என்கிற 49 வயதான வட யார்க்ஷையரைச் சேர்ந்த பெண் தன்னுடைய கணவர் Stu-வை சந்திக்க எண்ணி இருக்கிறார். இதனிடையே இவருடைய மூன்று பிள்ளைகளையும் பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டு அவர்களை அழைத்துக் கொண்டு இவரது தந்தை சென்றுவிட, Kirsty-ஐ சந்திக்க அவருடைய கணவர் Stu வீட்டுக்கு வந்திருக்கிறார்.
அப்போது அவர் வீட்டில் கண்ட காட்சி அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆம், Kirsty கண்கள் இரண்டும் திறந்த நிலையில் சுயநினைவு இன்றி இருந்திருக்கிறார். பதறிப்போன Stu முதலுதவி செய்து கொண்டே, மருத்துவ குழுவினரை உதவிக்கு அழைக்க, வந்தவர்கள், மாரடைப்பு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்ற Kirsty-க்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர். அப்போது ஒருபுறம் நிலைமை ஆபத்தாக இருக்கிறது என்று மனதை தேற்றிக் கொள்ள Stu-வுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில் தனக்கு நடந்த அற்புதம் குறித்து பேசி இருக்கிறார் Kirsty.
அதன்படி மருத்துவர்கள் தனக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் பொழுது சுமார் 40 நிமிடம் தன் உயிர் தன் உடலில் இல்லை என்றும் உடலிலிருந்து பிரிந்து போன தன் ஆவி, தன் வீட்டுக்கு போனதாகவும் அங்கு ஆவிகளுடன் பேசக்கூடிய தொழில் செய்யும் தன் தோழி தன்னை சந்தித்ததாகவும், அப்போது, தான் உயிர் வாழும் நம்பிக்கை போய்விட்டதால், தனது பிள்ளைகளுக்கும் தனது தந்தைக்கும் என்னென்ன தேவை என்று தான் சொல்ல செல்ல ஒரு பட்டியலில் தயாரிக்கும்படியும் தோழியிடம் கேட்டதாகவும், ஆனால் அந்த தோழியோ, ‘மருத்துவமனையில் உன்னை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறார்கள்.. நீ உன் உடம்புக்கு திரும்ப போய்தான் ஆக வேண்டும்’ என்று உறுதியாக கூறினாராம். அதன் பிறகு தன் உடலுக்கு திரும்பிய Kirsty திடீரென கண் விழித்து தன்னுடைய கணவர் எங்கே என்று கேட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய இந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் தான் உயிரிழந்து விட்டால் தன்னை சார்ந்தவர்களை எப்படி பார்த்துக் கொள்வது என்கிற பதைபதைப்புடன் இருந்த தனக்கு இப்படி தோன்றி இருக்கலாம் என்றும் கூறும் Kirsty, தற்போது ‘ஆன்க்ஸைட்டி’ நோய்க்குறி பிரச்சனைகளால் அவதிபடுவர்களுக்கு ஆலோசனை வழங்கி வருவதுடன் இந்த அனுபவங்களையும் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
மற்ற செய்திகள்