வரலாற்றுலயே இவ்வளவு பெரிய ஜாக்பாட் யாருக்கும் அடிச்சது இல்ல.. லாட்டரி வாங்கிய தாத்தாவுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாட்டரியில் வென்ற நபரின் பெயரை அறிவித்துள்ளது லாட்டரி நிர்வாகம்.
Images are subject to © copyright to their respective owners.
உலகின் பல நாடுகளில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது. தங்களுடைய அதிர்ஷ்டத்தை சோதித்துப் பார்க்க விரும்பும் நபர்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். ஆனாலும் யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என யார்தான் சொல்லி விட முடியும்? ஒரே லாட்டரி டிக்கெட் மூலம் திடீரென பெரும் பணக்காரர்களான நபர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டிருப்போம். தற்போது அந்த வரிசையில் இணைந்துள்ளார் அமெரிக்கர் ஒருவர்.
Images are subject to © copyright to their respective owners.
இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அட்லாண்டாவில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது, அங்கு லாட்டரி விற்பனை நடைபெறுவதை அறிந்து ஒரு லாட்டரி டிக்கெட்டையும் வாங்கியுள்ளார். அதில் இவர் தேர்வு செய்திருந்த 5 இலக்க எண்ணுக்கு 2.04 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 16,500 கோடி ரூபாய்) பரிசாக விழுந்திருக்கிறது. கலிபோர்னியா சட்டப்படி லாட்டரியில் பரிசு வென்றவர்களின் பெயர்களை விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியிடலாம்.
அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை லாட்டரியில் ஜாக்பாட்டை வென்ற நபர் எட்வின் கேஸ்ட்ரோ என அறிவிக்கப்பட்டுள்ளது. வரிப் பிடித்தம் போக கேஸ்ட்ரோவிற்கு 997.6 மில்லியன் டாலர் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள லாட்டரி நிர்வாகத்தின் இயக்குனர் ஆல்வா ஜான்சன் எட்வின் கேஸ்ட்ரோவின் இந்த வெற்றி நம்பமுடியாத மற்றும் வரலாற்று வெற்றி என தெரிவித்திருக்கிறார். மேலும், கேஸ்ட்ரோவின் வயது, அவருடைய முகவரி, எந்த வகையில் அவர் பணத்தை பெற இருக்கிறார் என்பது குறித்த விபரங்களை லாட்டரி நிர்வாகம் வெளியிட மறுத்துவிட்டது.
Images are subject to © copyright to their respective owners.
லாட்டரியில் ஜாக்பாட் வென்றது தனக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்திருப்பதாக தெரிவித்திருக்கிறார் கேஸ்ட்ரோ. இந்த சூழ்நிலையில், கேஸ்ட்ரோவிற்கு ஜாக்பாட் டிக்கெட்டை விற்பனை செய்த கடையின் உரிமையாளருக்கும் சட்ட விதிகளின்படி 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைக்க இருக்கிறது. கடந்த ஆண்டு டிக்கெட்டை கேஸ்ட்ரோ வாங்கி இருப்பதால் இந்த ஆண்டு நவம்பருக்குள் அவர் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என லாட்டரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
மற்ற செய்திகள்