"எப்படியாவது பனிச் சிறுத்தையை போட்டோ எடுத்தே ஆகணும்".. 165 கிலோமீட்டர் நடந்தே சென்ற போட்டோகிராஃபர்.. கடைசியா நடந்த அபூர்வம்.. வைரல் Pics..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பனிச் சிறுத்தையை புகைப்படம் எடுக்க 165 கிலோமீட்டர் நடந்தே மலைகளில் பயணம் செய்திருக்கிறார் புகைப்பட கலைஞர் ஒருவர்.

"எப்படியாவது பனிச் சிறுத்தையை போட்டோ எடுத்தே ஆகணும்".. 165 கிலோமீட்டர் நடந்தே சென்ற போட்டோகிராஃபர்.. கடைசியா நடந்த அபூர்வம்.. வைரல் Pics..!

அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கிட்டியா பாவ்லோவ்ஸ்கி. இவருக்கு பனிச் சிறுத்தையை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் வெகுநாட்களாக இருந்திருக்கிறது. இதனால் இமயமலை சரிவுகளில் வாழ்ந்துவரும் பனி சிறுத்தைகளை புகைப்படம் எடுக்க முடிவெடுத்திருக்கிறார் அவர். இதற்காக நேபாளத்திற்கு பயணம் செய்த அவர், பனிச் சிறுத்தைகளை தேட துவங்கிருக்கிறார். ஆனால், பாவ்லோவ்ஸ்கியின் இந்த பயணம் அவ்வளவு எளிதானதாக இல்லை.

ஆனாலும் முயற்சியை கைவிடாத பாவ்லோவ்ஸ்கி தொடர்ந்து பயணித்து தன்னுடைய இலக்கை அடைந்திருக்கிறார். பனி சிகரங்களில் வாழும் சிறுத்தைகளை அவர் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் கொஞ்ச நேரத்திலேயே உலக அளவில் வைரலாகி விட்டன.

இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்,"உலகில் கண்டுபிடிக்க மிகவும் கடினமான பனிச்சிறுத்தையை கண்டுபிடிக்க 165.7 கிலோமீட்டர் நடந்தே பயணிக்க வேண்டியிருந்தது. பூமியின் மிகவும் அசாதாரணமான இடங்களில், நுரையீரல் பசியால் வாடும் உயரங்களில், பாலைவன பனி சிகரங்களில் பயணித்த பிறகு நான் எடுத்த புகைப்படங்கள் இவை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

பனி சிறுத்தையை புகைப்படம் எடுக்க, சுமார் 18,000 அடி உயரத்தில் அனாயசமாக பயணம் செய்திருக்கிறார் இந்த சாதனை பெண். இதனிடையே அவர் எடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kittiya Pawlowski (@girlcreature)

பொதுவாக பனி சிறுத்தைகளை கண்டறிவது கடினம். திபெத்திய பீடபூமியிலும், இந்தியா, நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளில் உள்ள இமயமலையின் உயரமான பகுதிகளிலும் இவை பரவலாக வசித்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் உலகம் முழுவதும் 10,000 பனிச்சிறுத்தைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இவற்றின் எண்ணிக்கை 2040 ஆம் ஆண்டுவாக்கில் 10 சதவீதம் வரையில் குறையலாம் என IUCN எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே, பனிச் சிறுத்தைகளை ஆபத்தில் இருக்கும் விலங்காக IUCN அறிவித்திருக்கிறது.

 

SNOW LEOPARD, PICTURE, PAWLOWSKI

மற்ற செய்திகள்