மளிகை சாமான் வாங்கச்சொன்ன மனைவி.. சோர்வுடன் கடைக்கு போன கணவனுக்கு திடீர்னு தோன்றிய விஷயம்.. ஒரே இரவில் மாறிய வாழ்க்கை..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் எதேச்சையாக லாட்டரி வாங்கிய ஒருவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதற்கெல்லாம் தன்னுடைய மனைவி அனுப்பிய மெசேஜ் தான் காரணம் என்கிறார் அவர்.
லாட்டரி
அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். அதுபோலத்தான் நடந்திருக்கிறது பிரஸ்டன் மக்கி என்பவரின் வாழ்க்கையிலும்.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர் பிரஸ்டன் மக்கி. 46 வயதான இவர் சமீபத்தில் வழக்கம்போல காலையில் கிளம்பி தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். மாலையில் அவர் வீடு திரும்ப நினைத்தபோது அவருடைய மனைவி ஒரு மெசேஜை அவருக்கு அனுப்பியிருக்கிறார். அதில், சில மாளிகைப்பொருட்களின் தேவை இருப்பதாகவும் அதனை வாங்கிவருமாறும் குறிப்பிட்டிருக்கிறார் பிரஸ்டன் மக்கியின் மனைவி.
மளிகை பொருட்கள்
இதனையடுத்து வீட்டுக்குச் செல்லும் வழியில் அமைந்திருந்த ஸ்டோருக்கு சென்ற அவர் அங்கு லாட்டரி கவுண்டரை பார்த்திருக்கிறார். வீட்டுக்கு தேவையான சாமான்களை வாங்கிய அவர், எதேச்சையாக ஒரு டிக்கெட்டையும் வாங்கியிருக்கிறார் அவர். ஆனால், அந்த டிக்கெட் தனது வாழ்க்கையை மாற்றியமைக்க போகிறது என்பது அவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. டிக்கெட்டை வாங்கிய கையோடு வீட்டுக்குத் திரும்பிய அவர், லாட்டரியில் 05-12-16-17-29 என்ற எண்களை உள்ளீடு செய்திருக்கிறார்.
அதன்பின்னர் அன்றாட வேலையில் மூழ்கிப்போன அவர், அடுத்தநாள் காலை தான் வாங்கிய டிக்கெட்டை ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் அதில் ஜாக்பாட் தொகையான 190,736 அமெரிக்க டாலர்கள் அந்த எண்களுக்கு விழுந்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்திருக்கிறது. இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர் துள்ளி குதித்திருக்கிறார்.
நம்பவே முடியல
இதுபற்றி பேசிய அவர்,"நான் அலுவலகத்தில் வேலையில் ஈடுபட்டிருந்தேன். மளிகை பொருட்களை வாங்கிவரும்படி எனது மனைவி மெசேஜ் அனுப்பியிருந்தார். வீட்டுக்குத் திரும்பும் வழியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கினேன். வழக்கமாக பரிசுத்தொகை 2 லட்சம் டாலர்கள் இருந்தால் மட்டுமே லாட்டரி வாங்குவேன். ஆனால், அன்று பரிசுத்தொகை கிட்டத்தட்ட 2 லட்சம் என்பதால் அன்றும் ஒரு டிக்கெட்டை வாங்கினேன். அடுத்தநாள் நான் சமயலறையில் இருந்தபோது, டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோதுதான் எனக்கு ஜாக்பாட் தொகை கிடைத்திருப்பதை பார்த்தேன். என்னால் இந்த வெற்றியை நம்பவே முடியவில்லை" என்றார்.
Also Read | வலியோடு 2 வருஷம் வெளிநாட்டில்.. பெற்ற மகள்களை முதல்முறை நேரில் பார்த்த தந்தை.. நெகிழ வைக்கும் வீடியோ..!
மற்ற செய்திகள்