"ஒண்ணு இல்ல, ரெண்டு இல்ல மொத்தம் அஞ்சு தடவ.." கணவர் எடுத்த அதிர்ச்சி முடிவு.. தனியாக தவிக்கும் மனைவி.. பரபரப்பு பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக,இருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தாலே, தங்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல குழந்தைகளை பெற்றுக் கொண்டு, சிறந்த முறையில் வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைப்பார்கள்.
அந்த வகையில், நைஜீரியாவை சேர்ந்த பெண் ஒருவர், குழந்தை பெற்றெடுத்த நிலையில், அவரது கணவர் அவரை விட்டுச் சென்றதும், அதன் பின்னால் உள்ள காரணமும் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உகாண்டாவைச் சேர்ந்த Nalongo Gloria என்ற பெண்ணிற்கும், Ssalongo என்ற வாலிபருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இந்த தம்பதிகளுக்கு அடுத்தடுத்து குழந்தைகளும் பிறந்து வந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு முறையும் இந்த தம்பதிகளுக்கு இரட்டைக் குழந்தைகளாகவே பிறந்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நான்கு முறை கர்ப்பமான குளோரியா, மொத்தமாக நான்கு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மீண்டும் கருவுற்ற குளோரியா, ஐந்தாவது முறையாகவும் இரட்டைக் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதாவது மொத்தம் பத்து குழந்தைகளுக்கு தாயாகவும் மாறி உள்ளார் குளோரியா. இந்நிலையில், ஐந்து முறையும் இரட்டைக் குழந்தைகளை மனைவி பெற்றுக் கொண்டதால், இது இயல்புக்கு மாறான ஒரு காரியம் என கூறி, மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டுச் சென்றுள்ளார் கணவர் Ssalongo.
குழந்தைகள் பிறந்ததற்காக அதை நினைத்து மகிழ்ச்சி கொள்ளாமல், இப்படி விட்டு விட்டுச் சென்றது, குளோரியாவுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பேசும் குளோரியா, "நான் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்த மூன்றாவது நாளில் எனது கணவர், இது அவருக்கு அதிகம் என்று கூறி எங்களை புறக்கணித்தார். நான் இத்தனை குழந்தை பெற்றுக் கொண்டதற்காக வருத்தப்படவில்லை. அவர்களின் தந்தைக்கு இது நிச்சயம் பிடிக்காது என எனக்கு தெரியும். என் முன்னால் ஏராளமான சவால்கள் வந்தாலும் எனது குழந்தைகளை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன். கடவுள் எங்களைக் காப்பாற்றுவார் என எனக்கு தெரியும்" என்று குளோரியா தெரிவித்துள்ளார்.
அதே போல, ஆரம்பத்தில் தனக்கு பிறந்த குழந்தைகளில் சிலர், தன்னை விட்டுச் என்றதாகவும் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது கூட தனக்கு தெரியாது என்றும் குளோரியா கூறி உள்ளார். மேலும், தான் வேலை செய்து வரும் வீட்டின் உரிமையாளரும் இத்தனை குழந்தைகள் இருப்பதால் வேறு இடம் பார்த்து போக வேண்டும் என வற்புறுத்தி வருவதாகவும் குளோரியா குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்