‘ஒரே ஒரு தேக்கரண்டி தான்!’.. “உலகம் முழுக்க 54 மில்லியன் மக்களின் பாதிப்புக்கு இதுதான் காரணம்!” - அதிரவைத்த கணித மேதை.
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா பெருந்தொற்றின் அளவு உலகம் முழுக்க பரவியிருப்பது என்பது வெறும் ஒரு தேக்கரண்டிக்கும் கொஞ்சம் அதிகம் தான் என நிபுணர் ஒருவர் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுக்க 54 மில்லியன் மக்கள் கொரோனா பெருந்தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை 1,324,689 என பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், உலகமெங்கும் பரவியிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கையை ஒரு தேக்கரண்டியில் அள்ளலாம் என கணித மேதையான Matt Parker குறிப்பிட்டுள்ளார்.
அதாவது ஒரு தேக்கரண்டியில் 6 மில்லி லிட்டர் திராவகமே அள்ள முடியும், ஆனால் தற்போது உலகம் முழுவதும் பரவியிருக்கும் கொரோனா பெருந்தொற்றின் அளவு சுமார் 8 மில்லியன் லிட்டராக இருக்கும் என அவர் கணித்துள்ளார். அப்படியானால், உலகமெங்கும் இத்தனை குழப்பம், நெருக்கடி, பொருளாதார வீழ்ச்சி, இழப்பு உள்ளிட்டகற்றுக்கு காரணம் அந்த ஒரு தேக்கரண்டி அளவு பெருந்தொற்றே என்றார் நிகழ்ச்சி ஒன்றில் Matt Parker.
மனித உயிரணுவை விட கொரோனா வைரஸ் ஒரு மில்லியன் மடங்கு சிறியது என கூறியுள்ள அவர், மனித சமூகத்தில் கொரோனா பெருந்தொற்றின் எண்ணிக்கை 33 மில்லியன் பில்லியன் பரவியுள்ளது என கணக்கிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்