"உலகமே ஆடிப்போயி கெடக்கு"... "கொரோனா இன்னும் உக்கிரமா அடிக்கும்"... உலக நாடுகளை எச்சரிக்கும் 'WHO'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி மொத்த உலகமும் அவதிப்பட்டு வருகிறது. அனைத்து உலக நாடுகளும் கொரோனா வைரஸில் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அனைத்து உலக நாடுகளும் பொருளாதாரத்தில் சரிவடைந்துள்ளது.
அதே போல மக்களின் வாழ்வாதாரமும் மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. இதுவரை உலகளவில் சுமார் 25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த பல நாடுகள் ஊரடங்கை கடைபிடித்து வருகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ், 'பெரும்பாலான நாடுகள் இன்னும் தொற்று நோய்களின் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. அதே போல வைரசை கட்டுக்குள் கொண்டு வந்த நாடுகளில் தற்போது வைரஸ் மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளது. அதனால் உலக நாடுகள் எந்த தவறான முடிவையும் எடுத்து விடக்கூடாது. இன்னும் நாம் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த வைரசும் நம்முடன் நீண்ட நாட்கள் இருக்கும். இந்த கொடிய வைரஸை ஒழிக்க மருந்து கண்டுபிடிப்பதே ஒரே வழி. அதற்கான நடவடிக்கையை நாங்கள் கடுமையாக மேற்கொண்டு வருகிறோம்' என தெரிவித்துள்ளார்.