'ஊரடங்கு' நேரத்துல ரூல்ஸை... அதிகம் 'பிரேக்' பண்ணது இவங்க தானாம்... ஷாக் தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கிறது. தடுப்பூசி எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு ஆகியவை தான் கொரோனா பரவலை பெருமளவு கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.

'ஊரடங்கு' நேரத்துல ரூல்ஸை... அதிகம் 'பிரேக்' பண்ணது இவங்க தானாம்... ஷாக் தகவல்!

இந்த நிலையில் ஊரடங்கு நேரத்தில் விதிகளை அதிகம் மீறியது யார்? என்பது தொடர்பாக இங்கிலாந்து நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் சார்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக 13 வயது முதல் 24 வயது வரையுள்ள 2 ஆயிரம் பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. இதில் 19-24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களில் 50 சதவீதம் பேர், தாங்கள் ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியேறி இஷ்டம்போல் ஊர் சுற்றியதையும், இதற்காக தாங்கள் எடுத்த சாகச முயற்சிகளையும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டனர்.

இவர்களில் 5-ல் ஒருவர் போலீசிடம் பிடிபட்டு அபராதமும் செலுத்தியுள்ளனர். இதே வயது கொண்ட இளம்பெண்களில் 25 சதவீதம் பேர், இப்படி விதிமீறல்களில் ஈடுபட்டு உள்ளனர். எஞ்சிய 25 சதவீதம் பேர் 13-18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.