'அவங்களும் மனுசங்க தான்'... 'கொரோனா தடுப்பூசியில் பணக்கார நாடுகள் செய்யும் வேலை'... கடுமையாக எச்சரித்த ஐ.நா!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் பணக்கார நாடுகள் நடந்து கொள்ளும் விதம் குறித்து ஐ.நா கடுமையாக எச்சரித்துள்ளது.
கொரோனா தடுப்பு மருந்து நிறுவனங்களுடன் பணக்கார நாடுகள் நேரடியாக ஒப்பந்தம் செய்து கொள்கிறது. இதனால் ஏழை நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கொரோனா தடுப்பு மருந்தைச் சேகரித்து வைத்திருப்பதற்காக உலக நாடுகள் மருந்து நிறுவனங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு வாங்குகின்றனர்.
இது கோவாக்ஸ் திட்டத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் கோவாஸ் திட்டத்துக்கு ஒத்துழைத்தால் மட்டுமே,. கோவாக்ஸ் திட்டத்தில் உள்ள நாடுகளுக்கே நாங்கள் கரோனா தடுப்பு மருந்துகளை வழங்க முடியும்'' என ஐநா குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே தேவை உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்துகளை விநியோகிக்கக் கொண்டுச் செல்லப்படும் திட்டமே கோவாக்ஸ். உலக சுகாதார அமைப்பு உருவாக்கிய கோவாக்ஸ் திட்டத்தில் பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள் உட்படப் பல நாடுகள் உள்ளன.
இதற்கிடையே சுமார் 130 நாடுகள் ஒரு டோஸ் கொரோனா தடுப்பு மருந்தைக் கூடப் பெறவில்லை. வெறும் 10 நாடுகளுக்கு சுமார் 75% கொரோனா தடுப்பு மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இது நியாயமற்றது. அனைத்து நாடுகளுக்கும் கரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கடந்த வாரம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்