'புகை' பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தா... உலக 'சுகாதார' அமைப்பு எச்சரிக்கை!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அது மேலும் பல நோய்களை உருவாக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

'புகை' பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தா... உலக 'சுகாதார' அமைப்பு எச்சரிக்கை!

இந்தியாவில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்கள் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.

1. மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க சத்துமிக்க உணவுமுறையை பின்பற்ற வேண்டும்.

2. மதுவை தவிர்த்து, சர்க்கரை அதிகம் உள்ளவற்றை குடிப்பதை கட்டுப்படுத்த வேண்டும். புகைப்பிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

3. அதிகமாக புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் மேலும் பல நோய்கள் உருவாக  வாய்ப்புள்ளது.

4. நாள் ஒன்றுக்கு 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

5. மன ஆரோக்கியத்தை பாதுகாக்க, நம்பகத்தன்மை உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசுவது நல்லது.