கண்ணுல 'விளக்கெண்ணெய்' ஊத்திட்டு தான் இருக்கணும்...! ஏன்னா 'இந்தியா'லையும் 'கன்ஃபார்ம்' பண்ணியாச்சு... அதுவும் 'கோவிஷீல்ட்'ல தான் 'அப்படி' பண்றாங்களாம்...! - உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

இந்தியாவில் இதுவரை சுமார் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தியுள்ளனர். இதில் பெரும்பாலும் கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசிகள் ஆகும்.

கண்ணுல 'விளக்கெண்ணெய்' ஊத்திட்டு தான் இருக்கணும்...! ஏன்னா 'இந்தியா'லையும் 'கன்ஃபார்ம்' பண்ணியாச்சு... அதுவும் 'கோவிஷீல்ட்'ல தான் 'அப்படி' பண்றாங்களாம்...! - உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை...!

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனம் தற்போது ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியா மற்றும் உகாண்டாவில் போலி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WHO says fake covishield vaccines found in India and Uganda

இந்த சம்பவத்திற்கு பின், மருத்துவமனைகள், கிளினிக்குகள், சுகாதார மையங்கள், மொத்த விற்பனையாளர்கள், விநியோகஸ்தர்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்த உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை வலியுறுத்தியுள்ளது.

WHO says fake covishield vaccines found in India and Uganda

மேலும், 'போலியான கொரோனா தடுப்பூசி உலகத்தின் சுகாதாரத்திற்கே கேடு விளைவிக்க கூடியது. நோயாளிகளுக்குத் தீங்கு விளைவிக்க கூடிய இந்தப் போலியான தடுப்பூசிகளைக் கண்டறிந்து புழக்கத்திலிருந்து அகற்றுவது அவசியம்' என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

WHO says fake covishield vaccines found in India and Uganda

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் போலி கொரோனா தடுப்பூசி குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்