‘கொரோனா சிகிச்சைக்கு’... ‘இந்த மருந்து பயன்படுத்த வேண்டாம்’... ‘உலக சுகாதார நிறுவனம் அறிவுரை’...!!!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை கொடுக்கக் கூடாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு சீனாவின் வூகான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிந்த பாடில்லை. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 5 கோடி பேருக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு 90 லட்சத்தைக் கடந்து விட்டது. இதனால் கொரோனா தடுப்பூசி எப்போது வரும் என காத்திருக்கும் நிலையில் உலகம் உள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் கொரோனா தடுப்பூசிகள் குறித்து அவ்வப்போது நம்பிக்கை அளிக்கும் வகையில் தகவல்கள் கொடுத்து வந்தாலும், இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு அது வரவில்லை என்பதே யதார்த்தம். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட வழிகாட்டும் நெறிமுறைகளில் ரெம்டெசிவர் மருந்தால், கொரோனா நோயாளிகளுக்கு எந்த பலனும் கிடைக்காது என தெரிவித்துள்ளது.
இந்த மருந்து மரணத்தை தவிர்க்கவோ, வெண்டிலேட்டர் தேவையை குறைக்கவோ முடியாது என்பதால் நோயாளி எந்த நிலையில் இருந்தாலும், ரெம்டெசிவரை வழங்கக் கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. நல்ல பலன் அளிப்பதாக தகவல் வெளியானதால், கொரோனா சிசிக்சை அளிக்க ஆரம்ப காலக்கட்டத்தில் ரெம்டெசிவர் மருந்தை, மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.
ஆனால், ரெம்டெசிவர் மருந்து கொரோனா நோயைக் குணப்படுத்தாது என்று உலக சுகாதார அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது. மேலும், அதை கொரோனா நோயாளிகளின் சிகிச்சையில் பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவித்தியுள்ளது. ஏழாயிரத்திற்கு மேற்பட்ட கொரோனா நோயாளிகளிடம் ரெம்டெசிவர் மருந்தை அளித்து சோதித்து பார்த்ததில் உலக சுகாதார மையம் இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனால், இந்த மருந்தைப் பயன்படுத்தி வந்த நாடுகள் திகைத்து போய் உள்ளன.
மற்ற செய்திகள்