"குரங்கு அம்மையை தடுக்கணும்னா இந்த 5 விஷயத்தையும் உடனடியா செஞ்சாகனும்".. உலக நாடுகளுக்கு WHO கொடுத்த எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

குரங்கு அம்மை பரவுவதை தடுக்க 5 வழிமுறைகளை வெளியிட்டுள்ளது உலக சுகாதார ஆணையம் (WHO).

"குரங்கு அம்மையை தடுக்கணும்னா இந்த 5 விஷயத்தையும் உடனடியா செஞ்சாகனும்".. உலக நாடுகளுக்கு WHO கொடுத்த எச்சரிக்கை..!

Also Read | "ஐ.. நாம ஆர்டர் பண்ண போன் வந்துருச்சு.." பார்சல பிரிச்ச இளைஞருக்கு ஒரு நிமிஷம் தல சுத்திடுச்சு

குரங்கு அம்மை

வைரஸ் தாக்குதலால் ஏற்படும் அரியவகை நோய் தான் இந்த குரங்கு அம்மை. இதில் மொத்தம் இரண்டு வகை மரபணுக்களை கொண்ட வைரஸ்கள் இருக்கின்றன. முதலாவது பிரிவைச் சேர்ந்த வைரஸ், மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலும் இரண்டாவது வகை மேற்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் கண்டறியப்பட்டது. இருப்பினும் இதில் காங்கோ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் தான் மிகுந்த ஆபத்தானதாக கருதப்பட்டது.

WHO outlines five preventive measures to stop monkeypox transmission

இந்நிலையில், ஆப்பிரிக்காவை தாண்டி ஐரோப்பியாவிலும் பரவ துவங்கியுள்ளது இந்த குரங்கு அம்மை. தற்போது வரை ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு வெளிநாட்டு பயணிக்கு குரங்கு அம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரையில் 27 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பு பதிவாகி உள்ளதாகவும், இந்த நோயினால் 780 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

WHO outlines five preventive measures to stop monkeypox transmission

அறிகுறிகள்

குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, முதுகுவலி, உடல் நடுக்கம், சோர்வடைதல் ஆகியவை ஏற்படலாம். மேலும், இந்த நோயின் அறிகுறிகள் தோன்றிய 5 நாட்களுக்குள் உடலில் சிகப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். பின்பு அவை கொப்பளங்களாக மாறும். அடுத்த 2-4 வாரங்களில் இந்தக் கொப்பளங்கள் மறைந்து உதிர்ந்து விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

5 வழிமுறைகள்

குரங்கு அம்மை மேலும் பரவாமல் இருக்க கீழ்க்கண்ட 5 வழிமுறைகளை உலக நாடுகள் பின்பற்றவேண்டும் என உலக சுகாதார ஆணையத்தின் மரியா வான் கெர்கோவ் தெரிவித்துள்ளார். அவை,

விழிப்புணர்வு நடவடிக்கைகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட வேண்டும். பரிசோதனை வசதியை பெருக்க வேண்டும்.

மனிதர்களில் இருந்து பிற மனிதர்ளுக்கு பரவுவதை தடுக்கவேண்டும்.

முன்கள பணியாளர்களை பாதுகாக்க வேண்டும்.

மாற்று நடவடிக்கைகளை பயன்படுத்திட வேண்டும்.

குரங்கு அம்மை குறித்த ஆய்வுகளை முடுக்கிவிட வேண்டும்.

WHO outlines five preventive measures to stop monkeypox transmission

மேலும், இதுகுறித்துப் பேசிய மரியா," மனிதர்களில் இருந்து பிற மனிதர்களுக்கு குரங்கு அம்மை பரவுவதை தடுக்க வேண்டும். நோய்த்தொற்று பரவல் இல்லாத நாடுகளில் இதை மேற்கொள்ளலாம். தேவையான பொது சுகாதார கருவிகளை கண்டறியவேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். ஆகவே இது முக்கியமானது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்திட வேண்டும்" என்றார்.

 

Also Read | ‘தன் காதலனை காதலித்த வேறொரு பெண்?’.. விஷயம் தெரிஞ்சு முன்னாள் காதலனுடன் சேர்ந்து பெண் செஞ்ச காரியம்.. சென்னையில் பரபரப்பு..!

 

MONKEYPOX, WHO, PREVENTIVE, STOP MONKEYPOX TRANSMISSION, குரங்கு அம்மை

மற்ற செய்திகள்