'லாட்டரியில் ஜெயிக்கிறது கூட ஈஸி!.. ஆனா'... கொரோனா செய்யப்போகும் மிகப்பெரிய சம்பவம் 'இது' தான்... உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனாவில் இருந்து தப்பிப்பதை விட நீங்கள் லாட்டரியை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவதிலிருந்து அதிர்ஷ்டம் பாதுகாக்கும் என்று நம்புபவர்களுக்கு உலக சுகாதார அமைப்பின் முன்னணி நிபுணரிடமிருந்து தெளிவான அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி உருவாக்குவதற்கான சோதனைகள் முழுவீச்சில் நடந்து வரும் நிலையில், தற்போது உலகளவில் 3 கோடிக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 9 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புள்ளி விவர ரீதியாக கொரோனாவிலிருந்து தப்பிப்பதை விட, லாட்டரியில் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக் ரியான் எச்சரித்துள்ளார்.
"நாம் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்த வைரஸை நாம் தொடர்ந்து கட்டுக்குள் வைக்கவில்லை என்றால், இந்த வைரஸ் உலகில் 60 அல்லது 70 சதவீத மக்களுக்கு பரவும் என்று நாங்கள் கருதுகிறோம்.
அதாவது, இந்த உலகில் 200ல் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது" என டாக்டர் ரியான் கூறினார். அந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், கொரோனாவிலிருந்து தப்பிப்பதை விட லாட்டரி வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என ரியான் கூறினார்.
மற்ற செய்திகள்