"கடைசில எங்களையும் டிக்-டாக் பண்ண வச்சிட்டிங்களே...!" "வதந்திகளைத் தடுக்க எங்களுக்கு வேற வழி தெரியல..." 'கொரோனாவுக்கு' எதிராக களத்தில் இறங்கிய 'WHO'...

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

கொரோனா வைரஸ் பரவல் குறித்து பரப்பப்படும் பொய்யான வதந்திகளை தடுத்து, மக்களிடம் உண்மைத் தகவல்களை எடுத்துச் செல்ல உலக சுகாதார அமைப்பு டிக்-டாக் செயலியை பயன்படுத்த தொடங்கியுள்ளது.

"கடைசில எங்களையும் டிக்-டாக் பண்ண வச்சிட்டிங்களே...!" "வதந்திகளைத் தடுக்க எங்களுக்கு வேற வழி தெரியல..." 'கொரோனாவுக்கு' எதிராக களத்தில் இறங்கிய 'WHO'...

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் சுமார் 60 நாடுகளில் பரவியுள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் முழு வீச்சில் செயலாற்றிக் கொண்டிருக்கும் வேலையில், கொரோனா குறித்த பல்வேறு வதந்திகளும் வேகமாகப் பரவி வருகிறது. இதுபோன்ற தவறான தகவல்களைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு தற்போது சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் டிக்-டாக் செயலியில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ தற்போது 6.5 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்டுள்ளது.

 

இளம் பெண்களின் நடன அசைவுகளுக்கும், அரசியல் விமர்சன வீடியோக்களுக்கும் கிடைக்கும் வரவேற்பு இப்படியான வதந்திகளைத் தடுக்கும் டிக்டாக் வீடியோக்களுக்கு கிடைப்பதில்லை என்றாலும், உலக சுகாதார அமைப்பின் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

உலக சுகாதார அமைப்பை பின்பற்றி, யுனிசெஃப்பும், ரெட் க்ராஸ் சொசைட்டியும் கூட டிக்டாக் செயலி வழியாக தகவல்களைப் பதிவு செய்து வருகின்றன.

WHO, TIK-TOK, CORONA, POST VIDEOS, RUMOR