இதயத்துடன் பறந்து வந்த ஹெலிகாப்டர்...! 'திடீரென நெல் வயலில் விழுந்து...' காத்திருந்த நண்பர்கள் ஏமாற்றம் ...!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஜப்பானில், இதயத்துடன் பறந்து வந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால், நோயாளியின் இதய மாற்று அறுவை சிசிச்சை ரத்து செய்யப்பட்டது.

இதயத்துடன் பறந்து வந்த ஹெலிகாப்டர்...! 'திடீரென நெல் வயலில் விழுந்து...' காத்திருந்த நண்பர்கள் ஏமாற்றம் ...!

கிழக்காசிய நாடான ஜப்பான் புகுஷிமா நகரில், 50 வயதை கடந்த ஒருவர், நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார். மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை, இன்னொருவருக்கு பொருத்த, அவரது குடும்பத்தினர் சம்மதித்தனர்.

இதைத் தொடர்ந்து, அவரது இதயத்தை அகற்றி, டோக்கியோவில் உள்ள பல்கலைகழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இதய நோயாளி ஒருவருக்கு பொருத்துவதற்கு, டாக்டர்கள் முடிவு செய்தனர். பின், மூளைச்சாவு அடைந்தவரின் இதயத்தை, அறுவை சிகிச்சை மூலம் டாக்டர்கள் அகற்றிய நிலையில், டோக்கியோ நகருக்கு விரைவாக கொண்டு செல்வதற்காக, போலீஸ் ஹெலிகாப்டரை பயன்படுத்தினர். அந்த ஹெலிகாப்டரில், மூன்று போலீஸ் அதிகாரிகள், இரண்டு தொழில்நுட்ப உதவியாளர்கள், இரண்டு மருத்துவ பணியாளர்கள் என, ஏழு பேர் இருந்தனர். இதயத்தை பொருத்துவதற்காக பல்கலைக்கழக மருத்துவர்களும், நோயாளியின் உறவினர் மற்றும் நண்பர்களும் இதயத்திற்காக காத்திருந்தனர்.

ஆனால், அவர்கள் சென்ற ஹெலிகாப்டர், எதிர்பாராத வகையில், கொரியாமா பகுதியில் உள்ள நெல் வயலில் விழுந்தது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் பயணம் செய்த ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர். அங்கு சென்ற மீட்புக் குழுவினர், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் ஒருவரது நிலை, கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதயத்துடன் வந்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதால், டோக்கியோ பல்கலை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ரத்து செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

HEART