'உங்கள மீட் பண்ணவருக்கு...' 'கொரோனா கன்ஃபார்ம் பண்ணியாச்சு...' - WHO இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்றுள்ள நபருடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் உலக சுகாதார அமைப்பு பொது இயக்குனர் தற்போது தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் (WHO) பொது இயக்குனராக இருப்பவர் அதானம் கெப்ரியேசஸ். இவருடன் கொரோனா வைரஸ் பாதித்த நபர் ஒருவர் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த உண்மையை அறிந்த உடனே கெப்ரியேசஸ் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்ட நபர் என்னை தொடர்பு கொண்டது தெரிய வந்துள்ளது. ஆனால் தான் நலமுடனேயே இருப்பதாகவும். அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அறிகுறி இல்லையெனினும், வருகிற நாட்களில் உலக சுகாதார அமைப்பு வரைமுறைகளின்படி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்தபடியே பணி செய்ய இருப்பதாகவும். நாம் அனைவரும் சுகாதார வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியம். இதன் வழியே கொரோனா பரவலின் சங்கிலியை நாம் உடைக்க முடியும். வைரசை ஒழிக்க முடியும். சுகாதார விசயங்களை பாதுகாக்க முடியும். கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் மற்றும் கடுமையான பாதிப்பில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும் வேண்டிய பணிகளை நானும் என் சக ஊழியர்களுடனும் தொடர்ந்து மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்