கொரோனாவ 'கண்ட்ரோல்' பண்ற மருந்துகளில 'அந்த மருந்த' மட்டும் நீக்குறோம்...! - 'அதிரடி' அறிவிப்பை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு...!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸ் தொற்று பலரின் வாழ்க்கைப்போக்கையும் மாற்றிவிட்டது.
இதற்காக நாடுமுழுவதும் தடுப்பூசி போடுவது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு போடப்பட்டு வருகிறது.
இதற்கு முன்னதாக பிளாஸ்மா தெரபி, ஹைட்ராக்சி குளோரோகின் ஆகியவை கொரோனா தொற்றுக்கு எதிரான சிகிச்சையில் பலனளிக்கவில்லை என்று அவையெல்லாம் கைவிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக மேலும், உலக சுகாதார நிறுவனம் மருந்துகளின் பட்டியலில் இருந்து ரெம்டிசிவர் மருந்தை கைவிட முடிவு செய்துள்ளது.
மத்திய அரசு ரெம்டிசிவர் மருந்து உற்பத்தியை மேலும் அதிகரிக்க 38 கூடுதலான உற்பத்திக் கூடங்களுக்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் தற்போது உலக சுகாதார அமைப்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி உயிரிழப்புகளின் எண்ணிக்கை சற்று குறைந்து, 3,874 ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை விஸ்வரூபம் எடுத்துள்ள சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 76 ஆயிரத்து 70 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,57,72,400 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த காலத்தில் இந்த மருந்தை வாங்குவதற்காக மக்கள் பெரும் கூட்டமாக திரண்டு காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்