மொத்த நகரமே ஒரு கட்டிடம் தான்.. ஸ்கூல், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் உள்ளேயே இருக்கு.. இப்படியும் ஒரு இடமா.?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

அமெரிக்காவில் ஒரு பகுதியில் நகரத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ஒரே கட்டிடத்தில் வசித்து வருகின்றனர்.

மொத்த நகரமே ஒரு கட்டிடம் தான்.. ஸ்கூல், போலீஸ் ஸ்டேஷன் எல்லாம் உள்ளேயே இருக்கு.. இப்படியும் ஒரு இடமா.?

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | போலீஸ் அதிகாரியா அப்பாவுக்கு சல்யூட் வச்ச மகள்.. பெருமையோடு அப்பா பகிர்ந்த வீடியோ..!

பொதுவாக ஒரு நகரம் என்றவுடன் அகல சாலைகள், வீடுகள், மருத்துவமனை, காவல்நிலையம் என  நம்முடைய மனதிற்குள் ஒரு பிம்பம் எழும். ஆனால், ஒரு கட்டிடம் தான் நகரம் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் . ஆனால் உண்மையாகவே அப்படி ஒரு நகரம் இருக்கிறது. அமெரிக்காவில். இங்கே ஒரே கட்டிடத்தில் நகரின் பெரும்பான்மையான மக்கள் வசித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். எலும்புகளில் ஊடுருவும் குளிரும், அதிவேகமாக மாறும் காலநிலையும் கொண்ட ஒரு நகரம். இங்கே ஏங்கரேஜ் நகரத்தில் இருந்து தென் கிழக்கே சுமார் 58 மைல் தொலைவில் அமைந்துள்ளது விட்டியர் எனும் பகுதி. இரண்டாம் உலகப்போரின் போது இங்கே அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு பகுதியை உருவாக்கியது. அதனை தொடர்ந்து இங்கே சுரங்கப்பாதை அதுவும் 2.5 மைல் நீளத்திற்கு கட்டப்பட்டிருக்கிறது.

Whittier Alaska People live under one roof here are the facts

Images are subject to © copyright to their respective owners.

இங்குள்ள பெரும்பான்மையான இடம் அலாஸ்கா ரயில்வேக்கு சொந்தம். ஆகவே இங்கு வந்திருந்த ராணுவ வீரர்களுக்காக ஒரு 14 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. அந்த கட்டிடத்தில் தற்போது சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர். அதாவது விட்டியர் எனும் நகரத்தின் குடியிருப்பாளர்கள் பெரும்பான்மையானோர் இந்த கட்டிடத்தில் தான் வசித்து வருகின்றனர்.

Whittier Alaska People live under one roof here are the facts

Images are subject to © copyright to their respective owners.

இந்த கட்டிடத்திற்கு உள்ளே தேவாலயம், பள்ளி, தபால் மற்றும் காவல் நிலையம் ஆகியவை இருக்கின்றன. உணவகம் துவங்கி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இந்த கட்டிடத்திற்குள் கிடைக்கின்றன. இந்த பயணிக்க வேண்டும் என்றால் சுரங்க பாதையும் படகு போக்குவரத்தும் தான் வழி.

Whittier Alaska People live under one roof here are the facts

Images are subject to © copyright to their respective owners.

இந்த கட்டிடத்தில் 150 வீடுகள் இருக்கின்றன. இவற்றுள் பெரும்பான்மையானவை 3 படுக்கை அறைகளை கொண்டவை என சொல்லப்படுகிறது. இங்கேயே வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே வெளியூருக்கு பயணிப்பது வழக்கம். இங்குள்ள மோசமான காலநிலை காரணமாக வெளியூர் மக்களும் இந்த பகுதிக்கு செல்ல தயக்கம் காட்டுகின்றனர். இப்படியும் ஒரு நகரமா? என ஆச்சர்யப்படும் வகையில் அமைந்துள்ள இந்த கட்டிடம் இணையவாசிகளை தொடர்ந்து ஈர்த்தும் வருகிறது.

அதனாலேயே இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் பதிவுகள் அவ்வப்போது சமூக வலை தளங்களில் வைரலாகியும் வருகின்றன.

Also Read | என்னை அறிந்தால்.. அஸ்வின் & ஜடேஜாவை பத்தி வைரலான மீம் வீடியோ.. அஸ்வினின் ஜாலி கமெண்ட்..!

WHITTIER ALASKA, PEOPLE, ROOF

மற்ற செய்திகள்