'ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு விஸ்கி பாட்டில்!'.. 28 வயதில் அதை வெச்சு 'மகன்' என்ன செஞ்சார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ஸ்காட்லாந்தின் பீட் ராப்சன் என்பவர் கடந்த 28 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும்  தனது மகனுக்கு அளித்த விஸ்கி பாட்டில்கள் கொண்டு அந்த மகன் ஒரு வீட்டையே வாங்கியுள்ளார்.

'ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு விஸ்கி பாட்டில்!'.. 28 வயதில் அதை வெச்சு 'மகன்' என்ன செஞ்சார் தெரியுமா?

பீட் ராப்சனுக்கு 1992 இல் பிறந்த மகன் மத்தேயு ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்காக தந்தையிடம் இருந்து விஸ்கி பாட்டிலைப் பரிசாக பெற்றார். பீட் தனது மகனுக்கு 18 வயதாகும் வரை மட்டுமே இந்த பாரம்பரியத்தை எடுத்துச் செல்ல நினைத்தார். ஆனால் அது அதன் 28 ஆண்டுகள் தொடர்ந்தது. இப்படி தனது வாழ்நாளில், பீட் சுமார் 5000 டாலர் (தோராயமாக ரூ .5 லட்சம்) மக்காலன் சிங்கிள் மால்ட் விஸ்கியின் 28 பாட்டில்களை தந்தையிடம் இருந்து பெற, இத்தனை வருட சேகரிப்பின் மதிப்பு, 40,000  (தோராயமாக ரூ .40 லட்சம்) ஆக ஆனதை அடுத்து, அதை விற்று, அந்த பணத்தை தனது வீட்டு வைப்புக்கு பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்தார்.

ஆனால் விஸ்கி பாட்டிலை ஒரு குழந்தைக்கு கொடுப்பது ஒரு அசாதாரண விஷயம் என்று மத்தேயு ஒரு புறம் ஒப்புக்கொள்ள, இன்னொருபுறம் அந்த பாட்டில்களை தன் மகன் எப்போதும் திறக்க வேண்டாம் என்று கடுமையான நிபந்தனையுடனே அளித்ததாக பீர் கூறுகிறார். இந்த குடும்பத்திலிருந்து இந்த விஸ்கி பாட்டில்களை வாங்க நியூயார்க் மற்றும் ஆசியாவிலிருந்து வாங்க பலரும் ஆர்வமாக உள்ளனர். தற்போது 28 வயதாகும் பீட்டின் மகன் மத்தேயு தனக்காக ஒரு வீட்டை வாங்குவதற்கே, தந்தை அளுத்த இந்த விஸ்கி பாட்டில்கள் போதுமானதாக இருந்ததாக குறிப்பிடுகிறார்.

மற்ற செய்திகள்