விரைவில் பேரிடர் காலம் முடிவுக்கு வருகிறது.. ஒமைக்ரான் குறித்து விஞ்ஞானிகள் முழு விளக்கம்

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

லண்டன்: கொரோனா வைரஸ் (ஒமைக்ரான்) எத்தனை உருமாற்றம் கொண்டாலும் பாதிப்பு பெரிதாக இருக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

விரைவில் பேரிடர் காலம் முடிவுக்கு வருகிறது.. ஒமைக்ரான் குறித்து விஞ்ஞானிகள் முழு விளக்கம்

உலகின் பல நாடுகளிலும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் ஆன ஒமைக்ரான் வேகமாக பரவி கொண்டு வருகிறது. எனினும் நோய் தொற்றின் பேரிடர் காலம் விரைவில் முடிவுக்கு வரும் என அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் தான் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்காரன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது எண்ணிக்கையில் மிக வேகமாக அதிகரிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால் அதன் வீரியம் மிக குறைவாகவே உள்ளது. இதனால் பெரும்பாலானோர் மருத்துவமனைக்கு செல்லாமலேயே குணம் அடைந்துவிட்டனர். இது பற்றி அறிவியல் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகிறார்கள்.

முடிவுக்கு வருகிறது

இந்நிலையில் விஞ்ஞானிகள் வைரஸ் குறித்து கூறும்போது,  கொரோனா வைரஸ் எப்போதும் நீங்காது. அது உருமாறியபடியே மீண்டும் மீண்டும் வரும். ஆனால் அதன் உருமாற்றம் அதிகரிக்க அதிகரிக்க, நோய் தொற்றின் பேரிடர் காலம் முடிவுக்கு வரும் என்று தெரிவித்தனர்.

இரண்டு டோஸ் தடுப்பூசி 

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் தொற்று தாக்கினாலும் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி வீரியத்துடன் இருப்பதால் ஒமைக்ரான் பாதிப்பை முறியடித்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ஒமைக்ரான் இயற்கை தடுப்பூசி ?

இதனிடையே அண்மையில் மகாராஷ்டிரா சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்  பேட்டியில் கூறும் போது, “ ஒமைக்ரான் தொற்று என்பது இயற்கைத் தடுப்பூசி, லேசானஅறிகுறி, லேசான பாதிப்புடன் இருப்பதால் உடலில்நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். இதுதான் கரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வரும்நிலையாகும்”என கூறியிருந்தார்.

தவறான கருத்து

ஆனால் இந்த கருத்து முற்றிலும் தவறானது, ஆபத்தான போக்கு என மத்திய அரசின் சார்ஸ் கோவிட் மரபணு பிரிவின் தலைமை ஆலோசகராக இருந்த ஜமீல் எச்சரித்துள்ளார்.  “ ஒமைக்ரான் வைரஸ்தொற்று இயற்கைத் தடுப்பூசி என்ற கருத்து ஆபத்தான சிந்தனை, பொறுப்பற்றவர்களால் பரப்பிவிடப்படும் ஆபத்தான கருத்து. இதுபோன்ற கருத்து நமக்குமே நாமே ஆறுதல்படுத்திக்கொள்ள வைக்கும், சோர்வை அதிகரிக்கும், வேறு ஏதும் செய்யமுடியாத நிலையை உருவாக்கும். ஆபத்தை விலைகொடுத்து வாங்கக்கூடாது இந்த வைரஸைப் பற்றி முழுமையாக அறியாதவர்கள்தான் , நீண்டகாலப் போக்கை புரியாதவர்கள், குறைவாகப் புரிதல் உள்ளவர்கள்தான் இதுபோன்ற கருத்தைத் தெரிவிக்கிறார்கள் என்றார்.

வைரஸ் எச்சரிக்கை

இந்தியாவில் ஊட்டச்சத்துக் குறைவு, காற்றுமாசு, நீரிழிவு நோய் ஆகியவை அதிகமாக  காணப்படுகிறது. இப்படியான சூழலில் மக்களை வேண்டுமென்றே வைரஸ் தொற்றுக்கு ஆளாக்குவது என்பது அறிவியலைப் பற்றியும், பொதுசுகாதாரத்தைப் பற்றியும் சரியான புரிதல் இல்லாமையைக் காட்டுகிறது என்று  ஜமீல் எச்சரித்தார்.

தமிழகத்தில் எப்படி?

ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 -5 நாட்களில் தொற்று சரியாகிறது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறும் போது, ஒமைக்ரானால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு 24 மணி நேரத்தில் இரண்டுமுறை டெஸ்ட் எடுக்கப்படுகிறது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 4 -5 நாட்களில் தொற்று சரியாகிறது. தமிழகத்தில் இதுவரை 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் 87% பேர் முதல் டோஸ் போட்டுள்ளனர். 60.71% பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர் என்றார்.

OMICRON, OMICRON SYMPTOMS, ஒமைக்ரான், ஒமைக்ரான் வைரஸ்

மற்ற செய்திகள்