19 வயசுல என் ‘அம்மா’ இங்க வந்தாங்க.. இந்த ஒரு விஷயத்தை முழுசா நம்புனாங்க.. கமலா ஹாரிஸ் உருக்கமாக சொன்ன தகவல்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் தனது தாய் பற்றி உருக்கமாக தெரிவித்தார்.
உலகமே எதிர்பார்த்திருந்த அடுத்த அமெரிக்க அதிபர் யார்? என்ற கேள்விக்கு நேற்று முன்தினம் விடை கிடைத்தது. பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகளின் முடிவுகளைப் போலவே ஜனநாயக் கட்சி வேட்பாளர்களான ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் அமோக வெற்றி பெற்றனர். இதன் மூலம் ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது அதிபராகத் தேர்வாகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ், நாட்டின் முதல் பெண் துணை அதிபராக தேர்வாகியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய கமலா ஹாரிஸ், ‘எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஜனநாயகத்தைக் காத்த அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர்தான். ஆனால், இது வெறும் தொடக்கம் மட்டுமே, முடிவு அல்ல. ஒரு பெண்ணை நாட்டின் துணை அதிபராகத் தேர்வு செய்யும் துணிச்சல் ஜோ பைடனுக்கு இருந்துள்ளது. நாட்டு மக்கள் மீது ஜோ பைடன் வைத்திருந்த அளவற்ற அன்பே, இந்த வெற்றிக்கு வழிவகை செய்துள்ளது. ஜோ பைடனுக்கு வாக்களித்ததன் மூலம் உண்மை, ஒற்றுமை, நம்பிக்கைக்கு வாக்களித்துள்ளீர்கள்’ என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், ‘இந்த வெற்றி தருணத்தில் நான் எனது தாயான ஷியாமளா கோபாலன் ஹாரிஸை நினைவு கூற விரும்புகிறேன். அவர் தனது 19-வது வயதில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறியபோது, இதுபோன்ற ஒரு தருணத்தை எட்டுவோம் என்று நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். ஆனால் இதுபோன்று அமெரிக்காவில் சாத்தியமாகும் என முழுவதுமாக நம்பிக்கை வைத்திருந்தார்’ என அவர் உருக்கமாக தெரிவித்தார்.
மற்ற செய்திகள்