‘அந்த மனுசன் சொன்னது ஒன்னு... இவங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு!’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி!.. ‘எலன் மஸ்க்’ ட்வீட்டை அடுத்து நடந்த ‘வேடிக்கை’!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான வாட்ஸ் ஆப் தற்போது பயனாளர்களின் தனியுரிமை கொள்கையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

‘அந்த மனுசன் சொன்னது ஒன்னு... இவங்க புரிஞ்சுகிட்டது ஒன்னு!’ - வாட்ஸ் ஆப் பிரைவேசி பாலிசி எதிரொலி!.. ‘எலன் மஸ்க்’ ட்வீட்டை அடுத்து நடந்த ‘வேடிக்கை’!

வாட்ஸ் ஆப்பின் இந்த புதுப்பிக்கப்பட்ட தனியுரிமைக் கொள்கையில் (Whatsapp New Privacy Policy) பயனாளர்களுக்கு அச்சம் இருப்பதாக பலரும் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு வாட்ஸ் ஆப் தரப்பிலிருந்து அவர்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலான விளக்கங்கள் தெரிவிக்கப்பட்டது. எனினும் பயனாளிகள் பலரும் வாட்ஸ் ஆப்க்கு மாற்றாக வேறு செயலிகள் இருக்கின்றனவா என யோசிக்கின்றனர்.

அதுமட்டுமில்லாமல் வாட்ஸ் ஆப்க்கு மாற்றான செயலிகள் பற்றி கூகுளில் தேட ஆரம்பித்துள்ளனர். வாட்ஸ் ஆப் மற்றும் சிக்னல் செயலியை ஒப்பீடு செய்தும், இதே போல் வாட்ஸ் ஆப் மற்றும் மற்ற மெசேஜிங் செயலிகளை ஒப்பிட்டும் அவர்கள் கூகுளில் தேடி உள்ளனர்.

இந்த நிலையில்தான் எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டரில் ஒரு ட்வீட் பதிவிட்டார். நடப்பு உலகத்தின் எதிர்காலத்தை நோக்கிய தொழில்நுட்ப அசுரன் என இணையவாசிகளால் வர்ணிக்கப்படுபவர் எலான் மஸ்க். பேட்டரி வாகனங்கள், மூளையில் சிப் வைத்து மனிதர்களால் இயக்கப்படுவது என பல்வேறு விதமான தொழில் நுட்பங்களைப் பற்றி தொடர்ந்து பேசிவருகிறார்.

இவர் வாட்ஸ் ஆப்புக்கு பதில் சிக்னல் செயலியை பயன்படுத்துமாறு (Use Signal)  ட்விட்டரில் தன்னை பின்தொடருபவர்களுக்கு தகவல் தெரிவித்தார். இங்கு சிக்னல் என்னும் பெயரை சரியாக பலர் புரிந்து கொள்ளாமல் சிக்னல் அட்வான்ஸ் என்கிற இன்னொரு நிறுவனத்தில் அதிகம் பேர் முதலீடு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ALSO READ: ‘தந்தை இறந்து’.. ‘7 வருடம் ஆன பின்னும்’.. ‘கூகுள் எர்த்தில் தேடிய மகனுக்கு காத்திருந்த சர்ப்ரைஸ்!’.. நெகிழ வைத்த சம்பவம்!

இதனால் சிக்னல் அட்வான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 12 மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளி வந்துள்ளன். இதனிடையே சிக்னல் நிறுவனம் தங்களுக்கும் சிக்னல் அட்வான்ஸ் நிறுவனத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று விளக்கமும் அளித்திருக்கிறது.

மற்ற செய்திகள்