திடீர்ன்னு முடங்கிய வாட்ஸ்அப்.. அவதிப்பட்ட மக்கள்.. நடுவுல சிங்கிள்ஸ் பத்தி பறந்த மீம்ஸ்கள்!!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகெங்கிலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு செயலியாக வாட்ஸ்அப் இருந்து வருகிறது. கோடிக்கணக்கான மக்கள் இந்த செயலியை உலகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
Also Read | மனைவியை உயிருடன் புதைத்த நபர்.. ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்து வந்த அவசர அழைப்பு.. அடுத்தடுத்து பரபரப்பு!!
சிறந்த மெசேஜிங் செயலியாகவும் வாட்ஸ்அப் இருப்பதால் தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பேசவும், அலுவலகம் தொடர்பாக குழுக்கள் அமைத்து விவாதிக்கவும், குடும்ப உறுப்பினர்களுடன் குழுவாக பேசவும் என பல வசதிகள் இந்த செயலியில் உள்ளது. நாளுக்கு நாள் பயனர்களை கவரும் வகையிலான அப்டேட்கள் கூட வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில், திடீரென இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் வாட்ஸ்அப் செயலி முடங்கி போனது. மற்றவர்களுக்கு அனுப்பும் மெசேஜ் சென்றடையாமலும், வாட்ஸ்அப் செயலியை திறக்க முடியாமலும் என பல விஷயம் நடந்ததால், பயனாளர்கள் மத்தியில் குழப்பமும் உருவாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, #WhatsappDown என்ற ஹேஷ்டேக்குகள் கூட இணையத்தில் ட்ரெண்ட் ஆக தொடங்கி இருந்தது. மேலும், ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் வாட்ஸ்அப் வாடிக்கையாளர்கள் ஏராளமான கருத்துக்களை குறிப்பிட்டு வந்தனர். இதன் பின்னர், வேகமாக இந்த பிரச்சனையை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்டா நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சுமார் 2 மணி நேரம் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்த முடியாமல் இருந்ததையடுத்து மீண்டும் இதன் சேவை ஆரம்பிக்கப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில், வாட்ஸ்அப் சேவை இத்தனை நேரம் முடங்கியது இதுவே முதல் முறை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இதனிடையே, வாட்ஸ்அப் செயலி முடங்கி போன சமயத்தில் பல விதமான மீம்ஸ்கள் கூட இணையத்தை அதிகம் ஆக்கிரமித்திருந்தது. உதாரணத்திற்கு, வாட்ஸ்அப் செயலி முடங்கி போனதை சிலர் அதிர்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தனர். அதே வேளையில், சிங்கிள்களை குறிப்பிடும் வகையில், வாட்ஸ்அப் இருந்தாலும் யாரும் உனக்கு மெசேஜ் செய்ய யாருமில்லை. அப்புறம் அது முடங்கி போனதற்கு ஏன் வருத்தப்பட வேண்டும் என்ற விஷயத்தை குறிப்பிட்டு கூட பல மீம்ஸ்கள் பறந்தது.
மற்ற செய்திகள்