‘ஏன் சென்னையில மட்டும் 12:07-க்கு நிழல் விழல?’.. ஏப்ரல் 24-ஆம் தேதியின் அறிவியல் அதிசயம் என்ன?

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வானியலின் ஒரு அரிய நிகழ்வுதான், நிழல் இல்லாத பூஜ்ய நிழல் நாள் என்று சொல்லப்படும் zero shadow day.

‘ஏன் சென்னையில மட்டும் 12:07-க்கு நிழல் விழல?’.. ஏப்ரல் 24-ஆம் தேதியின் அறிவியல் அதிசயம் என்ன?

வருடத்துக்கு இரண்டு முறை தோன்றும் இந்த அரிய நிகழ்வின்போதும், எந்த ஒரு பொருளும் நபரும் வெளிச்சத்தில் இருந்தால்,  அந்த நிழல் சாய்வாக கீழே விழாமல், அந்த பொருளுடனோ அல்லது நபருடனோ நிஜத்தோடு நிஜமாக ஒன்றிப்போவதைக் காண முடியும். ஆனால் நிழலைக் கான முடியாது.  உச்சி மதிய வேளையில் Local time படி மதியம் 12.00 மணிக்கு இவ்வாறு நிழலைக் காண இயலாத இந்த அரிய நிகழ்வு நிகழும். இதுவே பூஜ்ய நிழல் நாள் என்று சொல்லப்படுகிறது.

அதன்படி இம்முறை சரியாக மதியம் பன்னிரெண்டு மணிக்கு நிகழாமல் 12.07 மணிக்கு இந்த நிகழ்வைக் காண முடியும். நம் தலை, வடிவம், பாதம் அனைத்தும் ஒடுங்கி, எந்த பக்கமும் நிழல் விழாமல் நமக்குள்ளேயே, நமக்கடியிலேயே நிற்கும். இதனால் நம் இருப்பிடத்தைத் தாண்டிய துல்லியமான புறத்தில் நிழலே விழாது. அந்த நேரத்தில் சூரியன் செங்குத்தாக இருக்கும். 

தனது அச்சில் தன்னைத் தானே சுற்றியபடி சுழலும் பூமி மார்ச் மாதம் சூரியனை நோக்கி சாயாமல் சுற்றுவதால், பூமத்திய ரேகை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மார்ச் 20 முதல் நிழல் இல்லாத நாள் தொடங்கும். இதே போல் ஜுன் 21-இல் பூமி தனது அச்சில் அதிகபட்சமாக  23 1/2 டிகிரி சாய்வதால் கடகரேகைக்கு அருகே இருப்பவர்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடங்குகிறது.

ஆனால் நண்பகல் என்றால் பெரும்பாலும் 12 மணிதான். எனினும் எல்லா இடங்களிலும் 12 மணிக்கு சூரியன் செங்குத்தாக இருப்பதில்லை என்பதால்,  தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் சரியாக 12:07 மணிக்கு  நிழல் தெரியாது. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோள் அரங்கத்தில்,இதை பொதுமக்கள் கண்டுகளித்துள்ளனர். 24-ஆம் தேதியான இன்று வேலூரில் 12.11 மணிக்கும், சென்னையில் 12.07 மணியளவிலும் இந்நிகழ்வு ஏற்பட்டுள்ளது.

கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் நிகழும் இந்த நிகழ்வு, கடக ரேகைக்கு வடக்கிலும் மகர ரேகைக்கு தெற்கிலும் நிகழாது. அதாவது இந்தியாவில் கடக ரேகைக்கு வடக்கில் உள்ள இடங்களில் இந்த நிகழ்வு நடைபெறாது.  இது நாம் வசிக்கும் இடத்தின் இருக்கும் அச்சாம்சம், தீர்க்காம்சம், புவிநடுநிலைக்கோடு மற்றும் கடகரேகை ஆகியவற்றின் நிலைகளை பொருத்தது.

WEATHER, TAMILNADU