Radhe Others USA
ET Others

ரஷ்ய ராணுவ வாகனங்களில் இருக்கும் ‘Z’ குறியீடு.. இதுக்கு பின்னாடி இருக்கும் ரகசியம் இதுதானா?.. வெளியான புது விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

ரஷ்ய ராணுவ வாகனங்களில் பதிக்கப்பட்டிருக்கும் Z குறியீடு குறித்து புது விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ரஷ்ய ராணுவ வாகனங்களில் இருக்கும் ‘Z’ குறியீடு.. இதுக்கு பின்னாடி இருக்கும் ரகசியம் இதுதானா?.. வெளியான புது விளக்கம்..!

உக்ரைனின் மீது ரஷ்யா 15 நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களும் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில் ரஷ்ய ராணுவ வாகனங்களில் பதிக்கப்பட்டுள்ள ‘Z’ என்னும் குறியீடு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. Z எழுத்து பதியப்பட்ட ரஷ்ய ராணுவ வாகனங்களின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன.

இந்த நிலையில், ரஷ்ய ஆதரவாளர்கள் சில கருத்துகளை கூறியுள்ளனர். அதன்படி, ‘Za pobedy’ என்னும் வார்த்தையில் உள்ள Z என்னும் எழுத்து, ‘வெற்றி’ என்பதை குறிக்கிறது. அதேபோல் ‘Zapad’ என்னும் வார்த்தையில் உள்ள Z குறியீடு ‘மேற்கு’ என்னும் பொருளைக் குறிக்கிறது என கூறுகின்றனர்.

ஆனால், ரஷ்யப் படையினர் போர்ப் பகுதிகளில் தங்களின் சொந்த வாகனங்களை அடையாளம் காணவே இவ்வாறான குறியீட்டை அமைத்துள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர். இப்படி உள்ள சூழலில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் அவசர காலக்கூட்டம் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஷ்ய மற்றும் உக்ரைன் நாட்டின் பிரதிநிதிகள் 'Z' குறியீடு குறித்து பேசினர்.

அதில், உக்ரைன் தூதர் செர்கி கைஸ்லெட்ஸியா கூறும்போது, ‘Z குறியீட்டுக்கு Zver என்று பொருள். இதற்கு ரஷ்ய மொழியில் மிருகங்கள் அல்லது விலங்குகள் என்று அர்த்தம்’ என கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்த ரஷ்யாவின் தூதர் வாசிலி நெபென்சி, ‘யார் விலங்குகள் என்பது குறித்து ரஷ்யர்களுக்கு சொந்தக் கருத்து உள்ளது’ என கூறினார்.

RUSSIANMILITARY, UKRAINIAN

மற்ற செய்திகள்