"டிரம்ப் தோல்வியை தாங்கிக்க மாட்டார். தோத்துட்டா வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற மாட்டேனு அடம் புடிப்பார்!"- ஜோ பிடன் குற்றச்சாட்டுக்கு டிரம்ப்பின் வைரல் பதில்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஒருபுறம் கொரோனா, இன்னொருபுறம் நிறவெறி தொடர்பான போராட்டங்கள் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், அதிபர் டிரம்ப் கொரோனாவை முறையாகக் கையாளவில்லை என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில் வரும் அமெரிக்க தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடனும் போட்டிடுவதை அடுத்து, ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.
இதுபற்றி பேசிய ஜோ பிடன், “அதிபர் டிரம்ப், வரும் தேர்தலில் தோல்வியுற்றால், அவரால் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியே வர மாட்டார். அதனால் தேர்தலில் அவர் முறைகேடு செய்ய முயற்சிக்கவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை டிரம்ப், தேர்தலில் தோல்வியுற்றால் வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேற மறுப்பார். அப்போது ராணுவத்தினரைத்தான் நான் நம்புகிறேன். அவர்கள் டிரம்பை வெள்ளை மாளிகையுள் நுழைந்து அங்கிருந்து டிரம்பை வெளியேற்ற வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், “ஒருவேளை வரும் தேர்தலில் நான் தோற்றால், வேறு வேலைகளை பார்க்கச் சென்றுவிடுவேன். நான் செய்ய வேண்டியது நிறையவே இருக்கிறது. ஆனால், வரும் தேர்தலில் இ-மெயில் மூலம் வரும் வாக்குகளைப் பெற ஜனநாயகக் கட்சியினர் முயன்று மோசடி செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்