'இப்படியா நடக்கணும்?'... நடந்து போன பெண்ணுக்கு..'நேர்ந்த கதி'.. அலறித்துடித்த சோகம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

எது எப்போது தலையில் வந்து விழும் என்பது நம் கையில் இல்லை என்று சொல்வார்கள். அப்படித்தான் சீனாவில் சோகமான ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

'இப்படியா நடக்கணும்?'... நடந்து போன பெண்ணுக்கு..'நேர்ந்த கதி'.. அலறித்துடித்த சோகம்!

சீனாவின் தென் பகுதியில் உள்ள நன்ஷன் மாவட்டத்தில் பாதாசாரியாக போய்க்கொண்டிருந்த பெண் ஒருவரின் தலையில் ஒரு பெரிய பளுதூக்கும் எடைக்கல் ஒன்று எதிர்பாராமல் விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவின் ஸென்ஷன் என்கிற இடத்தில் நிகழ்ந்த இந்த சம்பவத்தை நேரில் கண்ட பலரும் பதைபதைப்புக்குள்ளாகினர்.

கடந்த சனிக்கிழமை அப்பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் செல்வற்காக, பிற்பகல் நேரத்தில் அப்பகுதியைச் சேர்ந்த லி என்கிற பெண் நடந்து சென்றுள்ளார். அப்போதுதான் அவரது தலையில் பர்பெல் என்கிற மிக பளுவான எடைக்கல் ஒன்று விழுந்தது.

அப்போது லீயின் தலையில் பலமாக அடிபட்டதோடு, ரத்தம் சொட்டச் சொட்ட கீழே விழுந்த லீ அலறித் துடித்த போதும் அங்கிருந்த யாரும் லீயை காப்பாற்ற முன்வராததாகத் தெரிகிறது. அப்போது லீயின் முன்னாள் சென்றுகொண்டிருந்த 2 தோழிகளும், தங்களுடன் வந்த லீ எங்கே என்று தேடியபோதுதான், அவர்களிக்கு லீ-க்கு நடந்த சோதனை தெரியவந்தது.

இதனையடுத்து, இருவரும் லீ-யை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்த விசாரணையில், அப்பகுதியில் மேல் வீட்டில் வசிக்கும் ஒரு பெண்மணி, வீட்டை சுத்தம் செய்யும்போது அந்த எடைக்கல்லை தெரியாமல் தள்ளிவிட்டதால், இவ்வாறு நிகழ்ந்ததாகத் தெரியவந்தது. இந்த வீடியோ இணையத்தில் வலம் வந்து, காண்போரை கவலையடைய வைக்கிறது.

SAD, ACCIDENT, CHINA