'வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்க மாப்பிள்ளை கோலத்தில் நிக்குற?'... 'தாலிகட்டுற நேரம் அதிரடியா வந்த மனைவி'... ஆனா மொத்த பேருக்கும் பெரிய ட்விஸ்ட் கொடுத்த 'மணப்பெண்'!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

வேலைக்குச் செல்வதாகக் கூறிக் கொண்டு சென்ற கணவன் வேறொரு திருமணம் செய்யவிருந்த நிலையில் அதை மனைவி தடுத்து நிறுத்தினார். ஆனால் அங்கிருந்த அனைவருக்கும் மணப்பெண் வேற லெவல் ட்விஸ்ட்டை கொடுத்தது தான் ஆச்சரியத்தின் உச்சம்.

'வேலைக்கு போறேன்னு சொல்லிட்டு இங்க மாப்பிள்ளை கோலத்தில் நிக்குற?'... 'தாலிகட்டுற நேரம் அதிரடியா வந்த மனைவி'... ஆனா மொத்த பேருக்கும் பெரிய ட்விஸ்ட் கொடுத்த 'மணப்பெண்'!

ஜாம்பியா நாட்டை சேர்ந்த Abraham Muyunda என்ற நபர் மணமகளுடன் தேவாலயத்தில் திருமணம் செய்வதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென தேவாலயத்திற்குள் குழந்தையுடன் நுழைந்த பெண் ஒருவர் இந்த திருமணம் நடக்கக் கூடாது, உடனே திருமணத்தை நிறுத்துங்கள் எனக் கூச்சலிட்டார். இதனால் தேவாலயத்தில் இருந்தவர்கள் அனைவரும் திகைப்புடன் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர், இங்கு மணமகன் கோலத்தில் நிற்கும் நபர் எனது கணவர், அவருக்கும் எனக்கும் விவாகரத்து ஆகவில்லை. எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை. இங்கு என்ன நடக்கிறது என எனக்கு ஒன்றும் புரியவில்லை எனச் சத்தமிட்டார். மணமகன் கோலத்தில் நின்ற Abrahamக்கு ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கிறார்கள். அதோடு நான் வேலைக்குச் சென்று வருகிறேன் எனத் தனது மனையிடம் கூறிவிட்டு திருமணம் செய்ய அந்த தேவாலயத்திற்கு வந்துள்ளார். அப்போது மணமகன் கோலத்திலிருந்த Abrahamயை பார்த்த நபர் உடனே அவரது மனைவியிடம் நடந்ததைக் கூறியுள்ளார். அவரும் அடித்துப் பிடித்துக் கொண்டு தேவாலயத்திற்கு ஓடி வந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் மணப்பெண்ணின் குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருந்த நேரத்தில், மணமகள் மட்டும் எந்த சலனமும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். இதனால் மணமகளின் குடும்பத்தினர் அவரிடம் சென்று இங்கு என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் நீ ஒன்றும் பேசாமல் நிற்கிறாயே எனக் கேட்டுள்ளார்கள். அப்போது அவர் அளித்த பதில் அவர்களை மேலும் அதிர்ச்சியில் தள்ளியது. Abrahamக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பது எனக்கு முன்பே தெரியும் எனக் கூறினார்.

பல விந்தையான திருமண சட்டங்கள் கொண்ட ஜாம்பியா நாட்டில் பாரம்பரிய திருமண சட்டத்தின் படி, ஒரு ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும். ஆனால் தற்போதைய சட்டத்தின் படி பலதார மணம் செய்பவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும். இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த போலீசார், தேவாலயத்திற்கு வந்து Abrahamயை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள். இனி என்ன செய்யலாம் என குடும்பத்தார் ஆலோசனை செய்து வரும் நிலையில், Abraham மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மற்ற செய்திகள்