'சீக்கிரம் தரமான சம்பவங்களை பாப்பீங்க'... 'குதூகலமான டிரம்ப்' ... 'தடுப்பு ஊசி' குறித்து பரபரப்பு தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா நெருங்கி விட்டதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக கொரோனா கோர தாண்டவம் ஆடி வரும் அமெரிக்காவில் அதன் முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
சில நாடுகள் தடுப்பு ஊசியை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கவும் தொடங்கி விட்டது. இருப்பினும் எப்படியாவது ஒரு நல்ல செய்தி வந்து விடாதா என, உலக நாடுகள் அனைத்தும் ஆர்வமாக காத்து கொண்டு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் “கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிப்பதில் அமெரிக்கா மிக அருகில் வந்து விட்டதாக'' அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், தடுப்பூசி பரிசோதனையை நாங்கள் தொடங்கி விட்டோம். அது இன்னும் சில நாட்கள் நீடிக்கலாம். ஆனால் விரைவில் நல்ல செய்தி வரும், தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடிப்போம்'' என கூறியுள்ளார்.