‘17 நாளா வெறும் இலைய மட்டும் சாப்பிட்டேன்’.. காட்டில் தொலைந்த யோகா டீச்சரின் திக்திக் நிமிடங்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க பெண் ஒருவர் காட்டில் தனியாக தொலைந்து போன அனுபவம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவில் ஹவாய் மாகாணத்தில் வசித்து வரும் 35 வயதான யோகா பயிற்சியாளர் அமண்டா எல்லெர், கடந்த 8 -ம் தேதி மக்கோவா நகரின் வனப்பகுதிக்கு காரில் சென்றுள்ளார். பின்னர் காரை ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டிற்குள் தனியாக நடந்து சென்றுள்ளார்.
இதனை அடுத்து வெகுநேரமாகியும் அமண்டா வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அமெண்டாவின் செல்போனுக்கு குடும்பத்தினர் தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அமண்டா சென்போனை காரிலேயே விட்டு சென்றுள்ளார். உடனே காட்டிற்குள் அமண்டாவை தேடும் பணியை சுமார் 1000 பேர் மேற்கொண்டுள்ளனர். மேலும் அமண்டாவின் குடும்பத்தினரும் ஒரு ஹெலிக்காப்டரில் தீவிரமாக தேட ஆடம்பித்துள்ளனர்.
17 நாள்களுக்கு பின் அமண்டா காட்டுக்குள் ஒரு அருவியின் அருகே இருந்ததை கண்டுபிடித்து உடனடியாக அவரை மீட்டுள்ளனர். காட்டில் வழி தெரியாமல் நீண்ட தொலைவு நடந்ததால் அமண்டாவின் கால்கள் பலத்த காயம் அடைந்திருந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமண்டா, காட்டில் 17 நாள்கள் தனியாக இலைதழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்த அனுபவம் குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.