170 பயணிகளுடன் 'நொறுங்கிய' விமானம்... ஈரான் ஏவுகணை தான் காரணமா?... பதறவைக்கும் 'வீடியோ' காட்சிகள்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

170 பயணிகளுடன் பயணித்த உக்ரைன் விமானம் நொறுங்கி கீழே விழுந்ததற்கு ஈரான் ஏவுகணை தான் காரணம் என்று அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் குற்றஞ்சாட்டி இருக்கின்றன. ஈரான் வானவெளியில் இரவு நேரத்தில் ஏவுகணை செலுத்தப்பட்டதாகவும், அப்போது விமானம் தீப்பிடித்து நொறுங்கிய நிலையில் பறந்ததாகவும் கூறி நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

170 பயணிகளுடன் 'நொறுங்கிய' விமானம்... ஈரான் ஏவுகணை தான் காரணமா?... பதறவைக்கும் 'வீடியோ' காட்சிகள்!

குறிப்பிட்ட அந்த நேரத்தில் ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கான இரு அகச்சிவப்புக் கதிர் சிக்னலும், அதன்பின் வெடிப்பு ஒன்று நிகழ்ந்ததற்கான சிக்னலும் அமெரிக்க செயற்கைகோள் ஒன்றுக்குக் கிடைத்துள்ளதாக சி.பி.எஸ் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை அமெரிக்க புலனாய்வுத் துறைமூலம் தங்களுக்குக் கிடைத்ததாகவும் சி.பி.எஸ் நியூஸ் கூறியுள்ளது. இதற்கிடையில், ரஷ்யத் தயாரிப்பான 'தோர் எம்-1' ஏவுகணை மூலம் உக்ரைன் விமானம் வீழ்த்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கருதுகிறது.

மேற்கண்ட ஆதாரங்களை வைத்து கனடா, அமெரிக்கா நாடுகள் ஈரான் மீது குற்றம் சுமத்தியுள்ளன. ஆனால் இதை மறுத்துள்ள ஈரான் நாடு அமெரிக்கா வேண்டும் என்றே பொய்யான தகவல்களை பரப்பி வருவதாகவும், விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.