Valimai BNS

"சுத்தி வளச்சிட்டாங்க சார்.. என்ன பண்றது".. உக்ரைன் வீரரின் கேள்விக்கு கேப்டன் சொன்ன பதில்.. உலகை திரும்பிப் பார்க்க வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதாக நேற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்தார். ஒட்டுமொத்த உலகமும் கவலையுடன் ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை கண்காணித்து வருகிறது. கடல், தரை, வான் என மும்முனை தாக்குதலை ரஷ்யா முன்னடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனின் 13 வீரர்கள் கொண்ட குழு சரணடைய மறுத்து, அதனால் ரஷ்ய ராணுவத்தால் கொல்லப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

"சுத்தி வளச்சிட்டாங்க சார்.. என்ன பண்றது".. உக்ரைன் வீரரின் கேள்விக்கு கேப்டன் சொன்ன பதில்.. உலகை திரும்பிப் பார்க்க வைத்த வீடியோ..!

Russia-Ukraine Crisis: "பிரதமர் ஐயா.. காப்பாத்துங்க".. கவலையில் 500 பேரும் பதுங்கி இருக்கோம்"..‌ இந்திய மாணவர்களின் கலங்க வைக்கும் வீடியோ..!

உக்ரைனின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது ஸ்நேக் தீவு. கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவில் 13 உக்ரைன் வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை ரஷ்ய இரண்டு போர் கப்பல்கள் இந்த தீவுப் பகுதியை சுற்றி வளைத்துள்ளன.

பேச்சுவார்த்தை

ரஷ்ய படைகள் வருவதை அறிந்த உக்ரைன் வீரர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டனர். அப்போது, தீவில் இருந்த வீரர்களிடம் பேசிய ரஷ்ய ராணுவ வீரர்கள்," உடனடியாக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையவும். இல்லையேல் குண்டு வீசி உங்களை கொல்ல வேண்டி இருக்கும்" என மிரட்டல் விடுத்தனர்.

கேப்டனிடம் கேள்வி

இதனையடுத்து, ரஷ்ய ராணுவத்தினரின் தகவலை அங்கிருந்த 13 வீரர்களில் ஒருவர் தங்களது கேப்டனிடம் கூறி இருக்கிறார். " ரஷ்ய வீரர்கள் சுற்றி வளைத்துவிட்டார்கள், இப்போது என்ன செய்ய வேண்டும்?" என உக்ரைன் வீரர் தனது கேப்டனிடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு பதிலளித்த கேப்டன்,“சரணடைய முடியாது” என ரஷ்ய ராணுவத்தினரிடம் சொல்லுமாறு கூறி இருக்கிறார். அப்படியே சொல்லட்டுமா? என உக்ரைன் வீரர் கேட்க, கேப்டன் ஆம் என பதில் அளித்திருக்கிறார்.

பதில்

உடனடியாக ரஷ்ய ராணுவ கப்பலை தொடர்புகொண்ட உக்ரைன் வீரர்,"ரஷ்ய இராணுவமே, சரணடைய முடியாது” எனக் கூறி இருக்கிறார். சற்று நேரத்திற்குள் தீவை வெடிகுண்டால் சிதறடித்திருக்கிறது ரஷ்ய படை. அந்தத் தீவில் இருந்த 13 வீரர்களும் இதில் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த வீடியோ வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்த மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் எடுத்த விபரீத முடிவு..!

 

UKRAINE, RUSSIAN MILITARY, SOLDIER, உக்ரைன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைன் வீரர்

மற்ற செய்திகள்